Sunday, May 20, 2012

நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை


நந்தி கலம்பகம் - கலம்பகத்தில் நகைச்சுவை

தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.

நந்தியின் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்).

அவன் காதலியின் ஊடலைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டு வாசலில் நின்று பாடுகிறான்.

அவள் அவனை லந்து பண்ணுகிறாள்.

"ஓ...நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேய் தான் அலறுகிறது என்றாள், அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிடுகிறது என்றார்கள், என் தோழியோ நாய்தான் ஏதோ குறைக்கிறது என்றாள், அது எல்லாம் இருக்காது, நீ தான் பாடி இருப்பேன்னு நான் சொன்னேன்..."என்று அவனை கிண்டல் பண்ணுகிறாள்.

அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்....

நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்


நந்தி கலம்பகம் - எவ்விடம் செல்வோம்


கலம்பகம் என்பது பலவகை செய்யுள்களால் ஆன ஒரு பிரபந்தவகை.

பாடல் பெறும் தகுதியுள்ள ஒரு தலைவனைப் பற்றிப் பாடுவது மரபு.

50 இல் இருந்து 100 வரை செய்யுள்கள் அமைத்து பாடுவது வழக்கம்.

கலம்பகத்தில் எனக்குப் பிடித்தது நந்தி கலம்பகம்.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான்.

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு.

பாட்டுடை தலைவன் மேல் அறம் வைத்து பாடினால், அதை கேட்ட உடன் அவன் இறந்து விடுவான் என்று ஒரு நம்பிக்கை.

நந்தி வர்மனின் எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள்.

புலவனும், பணத்திற்கு ஆசைப் பட்டு, நந்தி வர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான்.

பாடிய பின், மனம் மாறி, தனக்கு பணம் கொடுத்தவர்களிடம் பாடல் எழுதவில்லை என்று சொல்லி விட்டான்.

அந்த புலவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. ஒருநாள் அவளோடு தனித்து இருக்கும் போது நந்தி கலம்பகம் என்ற தான் எழுதிய நூலில் இருந்து சில பாடல்களை பாடினான்

கேட்ட மாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு சில பாடல்கள் மனப் பாடம் ஆகிவிட்டது.

ஒருநாள் அவள் தெரு வழியே போகும் போது அந்த பாடல்களை பாடிக் கொண்டே போனாள்.

அதை உப்பரிகையில் இருந்து கேட்ட நந்தி வர்மன் அந்த பாடல்களில் மயங்கி, அவளை அழைத்து அந்த பாடல்களின் வரலாறு கேட்டு அறிந்தான். 
அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை ஒப்புகொண்டான்.

நந்தி வர்மன், முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவன் மறுத்து, "மன்னா, இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.

நந்தி கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவனைப் பாடச் சொன்னான்.

நூறு பாடல்கள். புலவன் சொன்னான் "மன்னா, நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒரு பந்தலில் இருந்து கேட்க்க வேண்டும்....அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றான்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் சாம்பலாய் போனான் என்று ஒரு கதை நிலவுகிறது.

நந்தியின் எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

தமிழிலில் இந்த கதையை பின்னணியாக வைத்து ஒரு சில வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. (கோ. வி. மணிசேகரன் என்று ஞாபகம்)

தமிழ் சுவைக்காக உயிர் கொடுத்த அந்த நந்தி கலம்பகத்தில் இருந்து ஒரு பாடல்....

Saturday, May 19, 2012

பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?


பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?

பெரிய புராணம்,

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை பற்றியது.

இதை ஒரு வரலாற்று நூல் என்றே கூறலாம்.

ஏனென்றால் நாயன்மார்கள் கற்பனை கதா பாத்திரங்கள் அல்ல. 
உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.

பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறை என்று அழைக்கப் படுகிறது.

படிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.

கம்ப இராமாயணம் போல் அவ்வளவு எளிமை அல்ல.

இருப்பினும், மிக இனிமையான பாடல்களை கொண்டது.

அதி காலை நேரம்.

கீழ் வானம் சிவக்கிறது.

வானெங்கும் பறவைகள்.

குளிர் பிரியா காற்று காதோரம் இரகசியம் பேசிச் செல்லும்.

மெல்லிய வானம்.

துல்லிய மேகம்.

பனியில் நனைந்த மலர்கள் மலரும் நேரம்.

அப்படி ஒரு கிராமத்தில், அந்த அதி காலை வேளையில் நடந்து போகிறீர்கள்.

அங்கங்கே குளங்கள் தென்படுகின்றன. அந்த குளங்களில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன.

அதை பார்க்கும் போது ஓராயிரம் சூரியன்கள் தரையில் உதித்த மாதிரி இருக்கிறது.

அந்த ஊர், திரு ஞான சம்பந்தர் பிறந்த சீர்காழி.

படிக்கும் போது மனதுக்குள் மழை அடிக்கும் அந்தப் பெரிய புராணப் பாடல்...

Thursday, May 17, 2012

குற்றாலக் குறவஞ்சி - நடனமாடும் தமிழ்


குற்றாலக் குறவஞ்சி - நடனமாடும் தமிழ்

திருக் குற்றாலக் குறவஞ்சி பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு இனிய பாடல் தொகுப்பு.

பக்தியும், காதலும், சிருங்காரமும், நகைச்சுவையும் சேர்ந்து இனிய சந்தத்தில் அமைந்த பாடல்கள்.

இராகம் போட்டுப் பாடலாம்.

சில பாடல்களில் பெண்களைப் பற்றிய வர்ணனை சற்று தூக்கலாகவே இருக்கும்.

ஜொள்ளர்களுக்கு நல்ல விருந்து.

குற்றாலத்தில் உள்ள சிவனை பாடல் நாயாகனாக கொண்டு எழுதப் பட்ட பாடல்கள்.

அதில் இருந்து ஒரு இனிய பாடல்....

பழமொழி - பயந்தவனுக்கு இல்லை பாதுகாப்பு


பழமொழி - பயந்தவனுக்கு இல்லை பாதுகாப்பு

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் துணை இருந்தாலும் - வீடு, மனைவி, சொத்து, நண்பர்கள், வேலை - மனதில் thairiyamum உறுதியும் இல்லாவிட்டால் அந்த மனிதனுக்கு எந்த துணையாலும் பிரயோஜனம் இல்லை.

மன வலிமையே மிகப் பெரிய வலிமை.

அதை சொல்கிறது இந்தப் பாடல்....

பழமொழி - முன்னுரை



பழமொழி - முன்னுரை



மனிதனின் கண்டு பிடிப்புகளில் மிக முதன்மையானது மொழி என்று கூறலாம்.

பொருள்களுக்கும், சம்பவங்களுக்கும், நிகழ்வுக்களுக்கும் பெயரிட்டது, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளை அறிந்து சொன்னது மிகப் பெரிய விஷயம்.

பழமொழிகள், மொழிக்கு மேல் ஒரு படி. ஆங்கித்தில் meta data என்று சொல்லுவதைப் போல.

பழமொழிகள் மனிதனின் அனுபவத் திரட்டுகள்.

மீண்டும் மீண்டும் மனித வாழ்க்கையில் தோன்றும் சம்பவங்களை ஒரு வரியில் அடக்கிய சாமர்த்தியம்.

முது மொழி என்றும் கூறுவர்.

தொல்காப்பியம் எவ்வளவு புராதனமானது?

அதில், தொல்காப்பியர் முதுமொழி பற்றி கூறுகிறார் என்றால், அந்த முதுமொழிகள் எவ்வளவு பழமையானதாக இருக்க வேண்டும்.

அப்படி பழமொழிகள் வருவதாய் இருந்தால், இந்த தமிழ் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருக்க வேண்டும் ?

கம்ப இராமாயணம் - தாயாரை நினைத்த இலக்குவன்


கம்ப இராமாயணம் - தாயாரை நினைத்த இலக்குவன்


இலக்குவன் சினந்து வரும் போது, அனுமன் ஏன் தாரையை அவன் முன் அனுப்பினான்?

விதவை கோலத்தில் இருக்கும் தாரையை பார்த்தவுடன் இலக்குவனுக்கு தன் தாய் நினைவுக்கு வருவாள்.

அப்படி நினைக்கும் போது, அவன் சீற்றம் குறையும் என்பது அனுமன் எண்ணம்.

அனுமன் சொல்லியபடி, தாரை, இலக்குவன் முன் வந்து, "இராமனை பிரியாத நீ, தனியாக வந்ததன் காரணம் என்ன" என்று கேட்கிறாள்
கேட்டது யார் என்று பார்க்கிறான் இலக்குவன்.

வெண்ணிலவு பூமிக்கு வந்தது மாதிரி நிற்கிறாள் தாரை.

ஏன் வெண்ணிலவு ?

அவள் விதவை கோலத்தில் வெண்ணிற ஆடை உடுத்து இருந்தாள் என்பதாலா ?

வெண்ணிலவு போல குளிர்ச்சியாக, நிர்மலமாக, இருப்பதாலா?

வால்மீகியில், சுக்ரீவன் தாரையையை தன் மனைவியாக்கி கொள்கிறான்.
கம்பன் அப்படி சொல்லவில்லை. அங்கு கூட தமிழ் கலாசாரத்தை கொண்டு வருகிறான் கம்பன்.


ஆர் கொலோ உரை செய்தார்?' என்று
அருள் வரசீற்றம் அஃக,
பார் குலாம் முழு வெண்திங்கள்பகல்
வந்த படிவம் போலும்
ஏர் குலாம் முகத்தினாளைஇறை
முகம் எடுத்து நோக்கி,
தார் குலாம் அலங்கல் மார்பன்,
தாயரை நினைந்து நைந்தான்.

ஆர் கொலோ = யார் அது

உரை செய்தார்?' என்று = சொன்னது என்று

அருள் வர = அருள் பொங்க

சீற்றம் அஃக = சீற்றம் அடங்க

பார் குலாம் = பார்பதற்கு சிறந்து விளங்குகின்ற

முழு வெண்திங்கள் = முழுமையான வெண்மையான நிலவு

பகல்வந்த = பகலில் வந்த

படிவம் போலும் = உருவம் போலும்

ஏர் குலாம் = அழகிய (ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம், திருப்பாவை)


முகத்தினாளை = முகம் உடைய தாரையை

இறை முகம் எடுத்து நோக்கி = தன் முகத்தை சற்றே எடுத்து நோக்கி

தார் குலாம் = மாலை சூழ்ந்த

அலங்கல் மார்பன் = அகன்ற மார்பை உடைய இலக்குவன்

தாயரை நினைந்து நைந்தான் = தன்னுடைய தாய்மார்களை நினைத்து நைந்தான்

தன் தாய்மார்களும் இப்படித் தானே விதவை கோலத்தில் இருப்பார்கள் என்று நினைத்து வருந்தினான்

தாரையை, இலக்குவனின் தாய் மார்களுக்கு இணையாக கூறுவதன் மூலம், தாரையை பற்றி உயர்ந்த எண்ணத்தை உருவாக்குகிறான் கம்பன்.

இலக்குவனின் கோவம் தணிகிறது. தாரை அவனை சமாதனப் படுத்துகிறாள்.

வீரர்களை அனுப்பிய செய்தியை கூறுகிறாள்.

இலக்குவன் சாந்தமாகி திரும்பி போகிறான்.

இலக்குவனை சமாதனப் படுத்துதல், தாரையின் கற்பு நெறி என்று எல்லாவற்றையும் ஒரு சில பாடல்களில் புரிய வைக்கிறான் கம்பன். 
இந்த இடத்தை விட்டால் வேறு இடம் இல்லை தாரையின் நிலையை விளக்க.

இப்படி ஒரு கதா சூழ்நிலையை உருவாக்கி அதை சாதிக்கிறான் கம்பன்.