Sunday, April 28, 2013

முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம்


முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம் 


அவனைப் பார்த்தது என் கண்கள்.

அவனோடு கலந்தது என் நெஞ்சம்.

தவறு செய்தது எல்லாம் இந்த கண்ணும் தோளும்...ஆனால் தண்டனை பெறுவது என்னவோ மெலியும் என் தோள்கள்.அது என்ன பாவம் செய்தது ?

தவறு செய்தவர்களை விட்டு விட்டு தவறு செய்யாதவர்களை தண்டிப்பது இந்த உறையூர் வளவனுக்கு முறை போலும்

பாடல்

கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு.


பொருள்


Saturday, April 27, 2013

திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல்


திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல் 



உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

சரக்கு அடிச்சாதான் கிக்கு வரும். காதல் பார்த்தாலே கிக்குதான்.

அதுதான் மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவராவது ஏழு வார்த்தைகள் உபயோகப் படுத்தி இத்தனை கொஞ்சம் அர்த்தம் தருவதாவது.


கொஞ்சம் உள்ள போய்  பாப்போம்.


உண்டார் கண் அல்லது அடு நறா காமம் போல் 
கண்டார் மகிழ் செய்தல் இன்று 

நறா என்றால் - பழங்கள், இனிப்புகள், கொஞ்சம் மருந்துப் பொருள்கள் எல்லாம் சேர்த்து காய்ச்சி வடிக்கும் ஒரு பானம். உடலுக்கு நல்லது. நாவுக்கு இனிமை தருவது. கொஞ்சம் மயக்கமும் தருவது. நல்ல மணம் இருக்கும். மூக்குக்கும் இனிமை.

அந்த நறா உண்டால் தான் சுகம் தரும். இந்த லவ்சு இருக்கே, அனுபவிக்கனுனு இல்ல, பார்த்தாலே சுகம் தரும்.

அது ஒரு அர்த்தம்.

ஒரு ஆணும் பெண்ணும் முதல் முதலில் பார்க்கிறார்கள். மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு. அது காதால் தானா என்று கூட அவர்களுக்குத் தெரியாது.

கண்ணால் கண்டார்கள். அவ்வளவு தான். அதுவே அவ்வளவு சுகம்.

அவள் தானா....நான் தேடிய செவந்திப் பூ இவள்தானா என்று முதல் பார்வையே மனதை  கொள்ளை கொண்டு சென்று விடும்.

தொட வேண்டும் என்றல்ல....பட வேண்டும் என்றல்ல...தூரத்தில் அவள் நடந்து வருவதைப் பார்த்தால் கூட போதும்...  அவன் மனதில் நந்தவனம் பூ பூப்பூக்கும்...சில பல மேகங்கள் சாரல் தூவி விட்டு செல்லும் ..தென்றல் கவரி வீசும்....தெருவோரப் புற்களும் பாதம் வருடும்....


காதல் அப்புறம் வரும்....அதற்க்கு முன்பே என்ப வெள்ளம் அள்ளிக் கொண்டு போகும்  ....

கண்டார் மகிழ் செய்யும் காதல்....

இதை படிக்கும்போது, உதட்டோரம் புன்னகை கசிந்தால், நீங்கள் காதல் தேவதையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்....



சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல்


சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல் 


வேலை நிமித்தமாய் வெளிநாடு போய்  இருக்கிறான் கணவன். புது இடம். புது மக்கள். புது சூழ்நிலை. வேறு உணவு. வேறு கால நிலை.  வேலைக்குப் போன இடத்தில் ஆயிரம் பிரச்சனை. அலுப்பு, எரிச்சல், கோபம், ஏமாற்றம் எல்லாம் உண்டு.

என்னடா வாழ்க்கை என்று வெறுப்பு வருகிறது.

இடையிடையே மனைவியின் நினைவு வருகிறது. அவள் புன்னகை, அவளின் இனிமையான தோற்றம், அவளின் மென்மையான குரல்...எல்லாம் வந்து வந்து போகிறது.

அவளை காண வேண்டும் ஏக்கம் எழுகிறது.....

சிறிது நாள் கழித்து வேலை முடிந்து வீடு வருகிறான்.

மனைவியை பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அவளுக்கும் அவனை ரொம்ப நாள் கழித்து பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அதிகாலையிலேயே எழுந்து, ஷாம்பூ போட்டு குளித்து, அப்படியே கொஞ்சம் சாம்பிராணி போட்டு, கூந்தலை அப்படியே அலை பாய விட்டு இருக்கிறாள்....

இராத்திரி எல்லாம் தூக்கம் இல்லை...மணிக்கொரு தரம் எழுந்து மணி பார்க்கிறாள்...தூக்கம் இல்லாததால் கண் எல்லாம் சிவந்து இருக்கிறது....

இதோ வந்து விட்டான்...

அவளைப் பார்க்கிறான்...

வாவ் ...என்று வியக்கிறான்..அலை பாயும் குழல், அதற்க்கு கீழே வளைந்த கரிய புருவம், இன்னும் கொஞ்சம் கீழே சிவந்த கண்கள்...அந்த கண்ணில் காதல், அன்பு, பாசம் எல்லாம் ததும்புகிறது...

வேலைக்கு போன இடத்தில் தூது வந்ததும், அதை காண வேண்டும் என்று என்னை பாடாய் படுத்தியதும் இந்த கண்கள் தான், அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அதே கண்கள் தான்....

என்னங்க, இது எல்லாம் சிலப்பதிகாரத்தில் இருக்கிரதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

பாடலைப் பாருங்கள், அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

பாடல்


அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த


பொருள்



Friday, April 26, 2013

இராமாயணம் - கை ஏந்திய கருணைக் கடல்


இராமாயணம் - கை ஏந்திய கருணைக் கடல்

இறைவனிடம் இல்லாதது எது ? எல்லாம் இருக்கிறது அவனிடம்.

இருந்தும், மானிடப் பிறவி எடுத்ததால், மனிதர்கள் போல் வாழுந்து அவர்களுக்கு ஒரு உதாரணமான வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறான்.

இராவணன், சீதையை கவர்ந்து சென்று விட்டான்.  சீதை இருக்கும் இடம் இலங்கை தெரிந்தது. அங்கு போக வேண்டும் என்றால் கடலை கடக்க வேண்டும்.

வருண பகவானை வேண்டுகிறான் இராமன்....சீதையை மீட்க்க ஒரு வழி தர வேண்டும் என்று தர்ப்பை புல்லில் அமர்ந்து வேண்டினான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.

பாடல்

'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !' என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.

பொருள்


பகவத் கீதை - புது ப்ளாக்

பகவத் கீதை - புது ப்ளாக் 


கீதை இந்து சமயத்தின் ஒரு முக்கியமான நூல்.  

கீதைக்கு பல பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்....ஆதி சங்கரர் , மத்துவர், ஸ்ரீ ராமானுஜர், இராதா கிருஷ்ணன், ஆசார்ய வினோபாபாவே போன்ற எண்ணற்ற பெரியோர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். 

ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.. ஒன்றுக்கு ஒன்று மிகுந்த வேறுபாடு உள்ளதாக இருக்கிறது. 

மதக் கோட்பாடுகளை அதிகம் சேர்க்காமல், எளிய தமிழில் பகவத் கீதையை,  ஒரு ஆற்றொழுக்கான போக்கில் எனக்கு தெரிந்த வரை எழுதி வருகிறேன் -இந்த ப்ளாகில் - படித்துப் பாருங்கள்.

பிடிக்கும் என்று நம்புகிறேன்.  

http://bhagavatgita.blogspot.in/2013/04/blog-post.html

நேரம் இருப்பின், உங்கள் கருத்துகளை "comments box "இல் எழுதுங்கள். நீங்கள் உங்கள் பெயரையும், ஈ மெயில் போன்ற விவரம் தரவேண்டிய அவசியம் இல்லை. அனாமதேயமாகவும் (annonymus ) நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

If you can fill in your e mail ID, in the subscribe box, you will be immediately notified whenever I post a blog. I will not be knowing who are all subscribed and their e mail id. You need not worry about privacy.

If you like it, please click g+ at the bottom of each blog.


நன்றாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்.

நன்றி

இராமாயணம் - அவன் பின்னால் போன மனம்


இராமாயணம் - அவன் பின்னால் போன மனம்

இராமனை முதன் முதலாகப் பார்த்த பின், சீதையின் மனம் அவளிடமே இல்லை. அவன் பின்னாலேயே போய் விட்டது.

சீதைக்கு ஆதங்கம் தாங்கவில்லை. இத்தனை நாள் என்கூடவே இருந்தது என் மனம். இன்னைக்குத் தான் அவனை பார்த்தது. நாளைக்கு திருமணம். அதுவரை கூட பொறுக்க  முடியாதா ? அதுக்குள்ள, அவன் பின்னாலேயே போய் விட்டது. இனிமேல் நாளை அவன் வரும்போது அவன் கூடத் தான் வரும்.

இப்படி கூட நடக்குமா ? வரட்டும் என் மனம், அது கிட்ட பேசிக்கிறேன்

பாடல்

கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?

பொருள்


திருக்குறள் - நெற்றி


திருக்குறள் - நெற்றி 


திருக்குறளில் தவறா ? திருக்குறளில் பிழையா ? வள்ளுவர் தவறு செய்வாரா ?

நம்ம ஹீரோ பயங்கர சண்டியர். களத்ல இறங்கிட்டர்னா இரண்டுல ஒண்ணுல   பாத்துருவார். பயம்னா என்னனே தெரியாது.

இவரு பேரை கேட்டாலே எதிரிங்க ஓடிருவாங்க. இவர் கூட சண்டை போடவே யாரும் வரமாட்டாங்க. அப்படி பின்னி பெடல் எடுக்கிறவர்.

என்ன செய்ய, தலைவிய பார்த்தவுடன் ஆள் அம்பேல்.

சோலையில் அவளைப் பார்த்தார்.

தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று வியந்தார் பின்
அவளை கொஞ்ச கொஞ்சமாய் இரசிக்கிறார்...கண்ணு , புருவம் என்று ஒவ்வொன்றாய் இரசிக்கிறார் என்று இதற்க்கு முந்தைய குறள்களில் பார்த்தோம் ...

இப்ப கொஞ்சம் அப்புல (up ) சூடுறார்....நெற்றி...

அறிவு ஒளி  பொருந்திய நெற்றி...

பெண்ணுக்கும் நெற்றியும் ஒரு அழகு..பெண்ணிடம் எதுதான் அழகு இல்லை ....

குகனிடம் சொல்லும்போது இராமன் சொல்லுவான்

"இந்நன்நுதல் இவள் நின் கேள்
இந் நளிர் கடல் உலகெல்லாம் உன்னுடையது 
நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்"

இந்த அழகிய நெற்றியை கொண்ட சீதை உன் உறவினள் என்று கூறுவான்.


வள்ளுவர் சொல்கிறார் அறிவு ஒளி பொருந்திய நெற்றி கொண்ட இந்த பெண்ணை பார்த்தவுடன், போர் களத்திற்கு வராதவர்கள் கூட நடுங்கும் என் வீரம் உண்டைந்து போய் விட்டதே என்று ரொம்ப பீல் பண்ணுகிறார்

ரொம்பதான் பீலிங்கு....

பொண்ணு அழகு மட்டும் அல்ல ...படித்த பொண்ணு....அறிவு முகத்தில் தெரியுது .....

பாடல்

ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.



பொருள்