Friday, August 16, 2013

திருக்குறள் - அறம் என்பது என்ன

திருக்குறள் - அறம் என்பது என்ன 



A big misunderstanding. I never said that we should join all the bad people and correct them or perish in that attempt.. But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.

அதற்காக நான் தீயவர்களோடு சேர்ந்து நானும் கேட்டு போக போகிறேன்என்று நான் சொல்லவே இல்லை. கெட்டவர்கலுக்கும் திருந்த ஒரு வழி இருக்க வேண்டும், வழி நடத்த சில நல்லவர்கள் முன் வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

கெட்டவர்கள் திருந்த என்ன செய்ய வேண்டும் ?  அவர்களோடு  சேர்ந்து, பழகி, உறவாடி அவர்களை திருத்த வேண்டும் என்று நினைப்பது தவறான ஒரு வழி.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேல் அழகர் அறம் என்பது என்ன என்று பற்றி ஒரே வரியில் விளக்கம்  தருக்கிறார்.

பரிமேல் அழகரைப் போல் திருக்குறளுக்கு இன்னொருவர் உரை செய்ய  முடியாது.


அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

இது பரிமேலழகரின் அறம் என்பது என்ன என்பது பற்றிய  விளக்கம்.

அறம் என்றால் மனு போன்ற நூல்களில்  ,சொன்னவற்றை செய்வது, அது செய்யக் கூடாது என்று   சொன்னவற்றை  செய்யாமல்  இருப்பது.

அது மட்டும்  அல்லாமல், அந்த அறம் என்பது  ஒழுக்கம்,வழக்கு, தண்டனை என்று  மூன்று பகுதிகளை  கொண்டது.

கெட்டவர்கள் என்பவர்கள் அற வழியில் செல்லாமல், அறம் அல்லாத வழியில்  செல்பவர்கள்.

அவர்கள் ஒழுக்கம்  அற்றவர்கள்.

அப்படி ஒழுக்கம் அற்றவர்களை எப்படி திருத்துவது என்றும் பரிமேலழகர்  கூறுகிறார்.

ஒழுக்கம் தவறியவர்களுக்கு அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த  இரண்டு விதிகள் இருக்கிறது.

ஒன்று வழக்கு. இன்னொன்று தண்டம்.

வழக்கு என்பது அவர்கள் வழுவிய அறத்தை விசாரித்து அறிவது.

அறிந்த  பின்,அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த அவர்களுக்குத் தண்டனை  விதிக்க வேண்டும் என்கிறார்.

பரிமேலழகர்  அற வழியில் இருந்து பிறழந்தவர்களை சீர் திருத்த பெரியவர்கள் அவர்களோடு பழகி, அவர்களுக்கு நல்லுரை கூறி, அவர்களை திருத்த வேண்டும் என்று  சொல்லவில்லை.

ஒருவன் குற்றம்  செய்தான் என்று தெரிந்தால் அவனை தண்டித்துத்தான் திருத்த வேண்டும்.  அவனோடு  பழகி,உறவாடி அவனை நல்வழிப் படுத்த வேண்டும் என்றும் யாரும் சொல்ல வில்லை.

உலகில் எந்த தண்டனைச் சட்டமும் கெட்டவர்களை திருத்த நல்லவர்கள் அவர்களோடு பழகி உறவாட வேண்டும் என்று சொல்லவில்லை.

தவறுக்கு தண்டனைதான் சரியான வழி.

கொலையில் கொடியாரை வெந்து ஒறுத்தல் பைங்கூழ் கழை கட்டதனோடு நேர் என்றார் .

களையை பிடுங்கி எறிய  வேண்டும். இல்லாவிட்டால் நல்ல பயிரையும் அது கெடுத்து   விடும்.




 But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.

Why to stop the question there ?

How about Jails ? Cells ? etc.  If a person raped a girl or killed somebody, should not there be any options fro them to correct or guide ? Why we hang the killers ? or why we put them in jail ?

Instead, we should ask good people to go and build relationship with them and change them. In other words, when somebody does something wrong, we should punish the good people in the country by forcing them to build relationship with those bad people and rectify them.

A country which does not punish the wrong doers and mandate the good people to rehabilitate those bad people, will flourish.

All tax evaders, murderers, rapists, drug smugglers, thieves, terrorists should be given unlimited options. They never should be put in jail. All good people should put all their effort to rehabilitate them.

Great idea !

Valluvar should be turning in his grave.


திருக்குறள் - சுற்றத்தார் கண்ணே உள

திருக்குறள் - சுற்றத்தார் கண்ணே உள 


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.

வர வர திருக்குறள் பற்றி எழுதவே அச்சமாக இருக்கிறது. 

பெரியவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள் என்று வள்ளுவர் கூறினார் என்றால், அப்படி என்றால் தீயவர்களை எப்படி திருத்துவது....நாங்கள் தீயவர்களோடு சேர்ந்து, அவர்களோடு உறவாடி, அவர்களை திருத்தப் போகிறோம்...வள்ளுவர் கிடக்கிறார், அவருக்கு என்ன தெரியும்...நாங்கள்  ஆள் என்று சில பேர் கிளம்பி விடுகிறார்கள். 

திருக்குறளைப் படித்து கெட்டு போக சிலர் தயாராக இருக்கிறார்கள். 

இவர்கள் மத்தியில் மேலும் குறள்களை சொல்ல அச்சமாக இருக்கிறது. 

வள்ளுவர் கள் உண்ணாதே என்று  இருக்கிறார் என்றால், அப்படி என்றால் கள் இறக்குபவன், அதை விற்பவன் பாடு என்ன ஆவது. அவர்களுக்கு யார் உதவி செய்வார்கள். எனவே,நான் கள்  குடித்தே தீருவேன் என்று ஆரம்பித்தால் என்ன செய்வது?

திருடாதே என்று சொன்னால்...பின் காவல் காரர்களுக்கும், நீதி பதிகளுக்கும் யார்  வேலை தருவார்கள். அவர்களைப் பற்றி இந்த வள்ளுவருக்கு அக்கறை இல்லை.  அவர்களுக்கு வாழ்வு அளிக்கவாவது நான் திருடப் போகிறேன் என்று கிளம்பி விடுவார்களோ என்று  பயமாக இருக்கிறது. 

அறம் சொல்லுவது கடினமான வேலைதான் போல் இருக்கிறது. 

விதுரன் சொன்னதை கேட்கவில்லை துரியோதனன். சகுனி சொன்னதைக் கேட்டான். 

வசிஷ்டர் சொன்னதை கேட்கவில்லை கைகேயி, கூனி சொன்னதை கேட்டாள் . 

விபீஷணன் சொன்னதை கேட்கவில்லை இராவணன், சூர்பனகை சொன்னதை கேட்டான். 

அததற்கு நேரம் வர வேண்டும் என்று நினைக்கிறேன். 

நான் யோசிப்பது உண்டு...ஏன் நம் முன்னோர்கள் தாங்கள் அறிந்த இரகசியங்களை  எல்லோருக்கும் சொல்லிப் போகவில்லை என்று. 

இப்போது தெரிகிறது. 

பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டி இருக்கிறது. 

குழந்தையிடம் வைரத்தை கொடுத்தால் அதுக்கு என்ன தெரியும். தூக்கிப் போட்டு விடும். நாள் ஆக வேண்டும், வைரத்தின் மதிப்பு தெரிய. 

குறள் படித்து சிலர் கெட்டுப் போக நான் காரணமாக இருக்க வேண்டுமா என்று  யோசித்துக் கொண்டிருக்கிறேன்.....


அபிராமி அந்தாதி - அவளை வணங்கினால் கிடைக்காதது

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

அபிராமியை வணங்கினால் எல்லாம் கிடைக்கும் ஆனால் இரண்டு விஷயம்  .கிடைக்காமல் போகும். அபிராமியை வணங்காதவர்களுக்கு கிடைக்கும், ஆனால் அவளை வணங்குபவர்களுக்கு கிடைக்காது.

அவை என்ன ?

ஒன்று, மறு பிறவி

இரண்டு, இன்னொரு தாயார்

மீண்டும் பிற்பதாய் இருந்தால் தானே இன்னொரு தாய் வேண்டும். மறு பிறவியே இல்லை என்றால் எதற்கு இன்னொரு தாய் ?

இந்த இரண்டும் அபிராமியின் பக்தர்களுக்கு கிடைக்காது. மத்தது எல்லாம் கிடைக்கும்.

எல்லாம் கிடைக்கும் என்றால், என்ன எல்லாம் கிடைக்கும் ?

ரொம்ப ஒண்ணும் இல்லை - கற்பக மரத்தின் நிழலில் தங்கும் நிலை கிடைக்கும். கற்பக மரம்  நினைப்பதை எல்லாம் தரும். எனவே, கற்பக மரத்தின் நிழலில் தங்குவது என்றால் நினைப்பது எல்லாம்   நடக்கும்.

 சரி,அந்த கற்பக மரத்தின் நிழலில் எவ்வளவு நாள் தங்குவது ? ஏதோ கொஞ்ச  காலம்  தங்கி பின் அங்கிருந்து போய் விட வேண்டுமா ?

கற்பக மரம் வானுலகில்  இருக்கிறது.அங்கு போன பின், மீண்டும் பிறவியே கிடையாது . நிரந்தரமாய் அங்கேயே இருக்க வேண்டியதுதான். மறு பிறவியும் கிடையாது, இன்னொரு தாயாரும் கிடையாது.

யாருக்குக் கிடைக்கும் ?

 அபிராமிக்கு பூஜை பண்ணுபவர்களுக்கா ? அவளை போற்றி பாடுபவர்களுக்கா ?

இல்லை.

பின் ?

கூந்தலில் நிறைய பூக்களை சூடியிருக்கும் அபிராமியின் அழகை மனதில் நினைத்துப் பார்பவர்களுக்கு, அது எல்லாம் கிடைக்கும். சும்மா, அந்த வடிவழகை நினைத்துக் கொண்டே இருந்தால் போதும்....

பொருள்


Thursday, August 15, 2013

தாயுமானவர் - சிங்காரம்

தாயுமானவர் - சிங்காரம் 



உன்னைச் சிங்காரித்து உன்னழகைப் பாராமல் 
என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே 

 இறைவா,உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.

சரி.இதில் என்ன  பிரமாதம்.  இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

தாயுமானவர், மிக  பெரியவர். உண்மை உணர்ந்த  ஞானி.

ஏன் இறைவனை அலங்கரிக்கிறோம் ? ,கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின்   சிலையை, படத்தை  துடைத்து,அபிஷேகம்  பண்ணி,  பூவாலும்,சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் பண்ணுகிறோம் ?

இறைவன்  பவனி வரும்  பல்லக்கு,தேர் போன்றவற்றையும் நாம் அலங்காரம் பண்ணுகிறோம்...ஏன் ?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம்  பண்ணு என்று இறைவன் கேட்டானா ? இல்லையே ...பின் எதற்கு அந்த அலங்காரம் ?

மனித மனம் அலைபாயக்  கூடியது.ஒரு  இடத்தில் நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு தியானம்  தேவை.

மனக் கட்டுப்பாடு அவ்வளவு எளிதில் வருவது  இல்லை.

முதலில் மனதை  ஒன்றின் மேல் படிய  , பதிய வைக்க வேண்டும். மனம் அதில் இலயிக்க வேண்டும். அதிலேயே கலக்க வேண்டும்.

அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம்.

கோவில் நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம்,சொற்பொழிவுகள் என்றும்,

மூக்குக்கு இனிமையாக  கற்பூரம்,ஊதுபத்தி, மலர்கள் என்றும்,

நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும்,

உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும்,

கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்ப்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள்,அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.


இறைவனை எவ்வளவுக்  எவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை.

நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா ...அது போல்.

குழந்தைகளுக்கு அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ.

மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்க்கிறோம்,அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்....

அப்படி அழகை இரசிக்கும் போது மனம் இலயிக்கிறது ...மனம் ஒன்று  படுகிறது. ஆவல்  எழுகிறது.

ஒன்றை இரசிக்கும் போது,  இரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி கொள்கிறோம்...கண்ணை மூடி  இரசிக்கிறோம்...அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும்  ...இரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை .அனுபவிக்கிறோம்..

இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது , அதில் இலயித்து அதை அப்படியே மனதில்  காண்போம்.

அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

 எனவே, உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் , அழியும் இந்த உடலை அலங்காரித்து  இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.  


தாயுமானவர் இது போல் 389 பராபரக் கண்ணிகளை எழுதி இருக்கிறார்.ஒவ்வொன்றும் ஆழ்ந்த கருத்துகளை  உடையது.

 மூல   நூலைப் படித்துப்  பாருங்கள்.


Wednesday, August 14, 2013

திருக்குறள் - இனத்தால் உண்டாகும் இன்னான் என்ற சொல்

திருக்குறள் - இனத்தால் உண்டாகும் இன்னான் என்ற சொல் 


மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா 
மின்னா னெனப்படுஞ் சொல்.

சீர் பிரித்த பின்

மனத்தானாகும் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாகும்
இன்னான் எனப்படும் சொல்

பொருள்

மனிதர்களுக்கு உணர்ச்சி மனத்தால் உண்டாகும்.

ஒருவன் இன்னவன் என்ற சொல் அவன் சேரும் இனத்தால் வரும்.

நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால், நல்லவன் என்ற பெயர் கிடைக்கும்.

கெட்டவர்களோடு சேர்ந்து இருந்தால், அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று கூட, கெட்டவன் என்ற பெயர் கிடைக்கும்.

மனிதனின் உணர்சிகள் அவன் மனதில் இருந்து பிறக்கிறது. மனம் நல்லது கெட்டது அறியாதது. சுத்தமான நீர் போன்றது.

நீர் சேரும் இடத்திற்கு தகுந்த மாதிரி மாறுவது போல மனிதர்கள் சேரும் இடத்தை  பொறுத்து மாறுகிறார்கள்.

நல்லவர்களோடு சேரும்போது நல்லவர்களாகவும்
தீயவர்களோடு சேரும்போது தீயவர்களாகவும் மாறி விடுவார்கள்.


இன்னும் சொல்லப் போனால், மனிதர்கள் மாறுவது இல்லை, அவர்கள் மாறிவிட்டதாக  இந்த உலகம் சொல்லும்.

இன்னான் எனப்படும் சொல்

என்கிறார்  வள்ளுவர்.

கெட்டவர்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் உலகம் கெட்டவன் என்றே  "சொல்லும்"

(இந்த குறள் பற்றி மேலும் எழுத ஆசை....)

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?


குசேலரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது எனக்கு.

வீட்டில் வறுமை. 27 பிள்ளைகள். அவர் ஒண்ணும் பெரிதாக வேலைக்குப் போய் சம்பாதித்தாகத் தெரியவில்லை.

பிள்ளைகள் அது வேணும், இது வேணும் என்று நாளும் கேட்டு தொந்தரவு செய்கின்றன.

சாதரணாமாக ஒரு பெண் என்ன செய்வாள் ?

கணவனை முதலில் திட்டித் தீர்பாள். அடுத்தது பிள்ளைகள் மேல் எரிந்து விழுவாள். ஏதோ பிள்ளைகள் பெறுவதும் , கணவனை குறை கூறுவதும் தான் தன்  முழு நேர வேலை என்று நினைத்துக்கொண்டு.

குசேலரின் மனைவி....

....வறுமை என்ற கடலில் அழுந்தினாலும், தன் கணவனை வெறுத்து பேச மாட்டாள், அவன் மேல் ஒரு பழியும் சொல்ல மாட்டாள், பிள்ளைகளை ஒரு சிறிதும் கடிந்து பேச மாட்டாள். இந்த வறுமை கடலை எவ்வாறு கடப்பது என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பாள்.....

பாடல்


இவ்வாறு மிடியென்னும் பெருங்கடலுள்
          அழுந்தியுந்தற் கினிமை சான்ற
செவ்வாய்மை அந்தணனை வெறுத்துரையாள்
          அலர்மொழிகள் சிறிதும் செப்பாள்
துவ்வாமை மைந்தர்கள்பால் மறந்துமியற்
          றாளவள்தன் சுகுணம் என்னே 
எவ்வாறித் துயர்க்கடல்நீந் துவமெனுமோர்
          எண்ணமுளத் தென்றும் உண்டால்.

பொருள் 

Monday, August 12, 2013

பாரதியார் - கடவுள் எங்கே ?

பாரதியார் - கடவுள் எங்கே ?


பாடல்

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

ஒரு நாள் ஒரு சீடன் பாரதியிடம் கேட்டான், குருவே, நான் இறைவனைக் காண வேண்டும். அவர் எப்படி இருப்பார் ? எங்கே இருப்பார் ? இராமர்  போல, கிருஷ்ணர் போல, சிவன் போல, திருமால் போல இருப்பாரா ? கோவிலில்,  குளத்தில்,மரத்தில், மலையில் ...எங்கே காணலாம் அவரை என்று கேட்டான்.

பாரதி பதில் சொன்னான்....வேதாந்தத்தின் உச்சம் அந்த  பாடல்கள்.

கடவுள் என்பவர் இரவி வர்மா வரைந்த படங்களில் உள்ளதைப் போல இருக்க மாட்டார்.

இந்த உலகம்  எல்லாம் அவன் படைத்தது என்பதால் எல்லாவற்றிலும் அவன் இருப்பான். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எல்லாம் மனிதனின் மடமை. எல்லாம் அவன் படைத்தது . அதில் உயர்வு ஏது , தாழ்வு ஏது ?

பாரதி  சொல்கிறான்.

 கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;


கழுதையை, கீழான பன்றியை, தேளைக் கண்டு தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும். 

சிவன் எங்கு இருக்கிறான்...எப்படி இருப்பான்....அழுக்கை சுமக்கும் கழுதை, அழுக்கை  உணவாக உண்ணும் பன்றி, விஷத்தை கக்கும் தேள் அவற்றின் பாதத்தில் சிவன் இருக்கிறான். 

சொன்ன பின் பாரதி யோசிக்கிறான்...அடடா எல்லாம் இறைவனின் அம்சம் என்று  சொல்ல வந்த நானே தவறு செய்து விட்டேனே என்று  நினைக்கிறான். கழுதையை  வெறுமனே சொன்ன பாரதி பன்றியை கீழான பன்றி என்று சொல்லி  விட்டான். விலங்குகளுக்குள் என்ன உயர்வு தாழ்வு.....

 தவறை திருத்துகிறான் அடுத்த வரியில் 

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

குப்பையையும் மலத்தையும் வணங்க வேண்டும்  என்றான்.அதிலும் கடவுள் இருக்கிறான். கடவுள் என்பவன்  வில்லேந்தி,சங்கு சக்கரம் ஏந்தி, திரி சூலம் ஏந்தி  வருபவன் அல்ல. கூளத்திலும் மலத்திலும் இருப்பவன். 

மீண்டும் பாரதி யோசிக்கிறான்.  அடடா மீண்டும் தவறு நிகழ்ந்து விட்டதே...அது என்ன  இறைவனை கழுதை, பன்றி, தேள், கூளம் , மலம் என்று சொல்லி ..வருகிறேன்..

ஏன்  குயிலை, மயிலை,  சந்தனத்தை, வைரத்தை,தங்கத்தை சொல்லாமல் விட்டு  தாழ்ந்த பொருள்களையே சொல்லிக் கொண்டிருக்கிறோமே ... என்று நினைக்கிறான்....அடுத்த வரியில் அதையும் திருத்துகிறான் .....

கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

சுற்றியுள்ள எல்லா பொருளும் தெய்வம் என்றான். 

பொருளே தெய்வம் என்றால் உயிர்களை என்ன  சொல்லுவது ? 

நீங்கள் வேண்டி விரும்பி வணங்கும் கடவுள் உங்களை சுற்றி எல்லா இடத்திலும்  இருக்கிறான். நீங்கள் தான் அவற்றை விட்டு விட்டு நீங்கள் நினைத்த  வண்ணத்தில் இறைவன் வேண்டும் என்று அடம்  பிடிக்கிறீர்கள். அப்படி வர வில்லை என்றால்  இறைவனை நீங்கள் ஏற்றுக் கொள்ள  மாட்டீர்கள். 

நீங்கள் விரும்பிய வண்ணம்  இராமனாகவோ,க்ரிஷ்ணனாகவோ, எசுவாகவோ  இறைவன் வர வேண்டும்....இல்லை என்றால் அவன் இறைவன் இல்லை, உங்களைப்  பொருத்தவரை.

விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே

கடவுள் விண்ணில் மட்டும் அல்ல, மண்ணும் அவனே.  

கோவிலை விடுங்கள் - விக்ரகங்களை விடுங்கள் - படங்களை விடுங்கள் - 

எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர பிரமத்தை உணருங்கள். 

ஓர் உருவம் ஓர் நாமம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ! ....என்பார் மணிவாசகர்.

அவனுக்கு எத்தனை பெயர்கள்  ... மரம், செடி, கொடி , வண்டி, காவல்  காரன்,பால் காரன்,  தபால் காரன், வேலைக்காரி, வாத்தியார், நண்பன்,  மாணவி,  கணவன், பிள்ளைகள், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவன்....

ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ....