Sunday, May 8, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - முன்னுரை

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - முன்னுரை 


நாம் பல ஆங்கிலப் படங்கள் பார்க்கிறோம். James Bond, Spider Man, Iron Man என்று பெரிய பலமான கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள். அவற்றில் வரும் கதாநாயகர்கள் நம்ப முடியாத செயல்களைச் செய்வார்கள். பறப்பார்கள், வலை பின்னுவார்கள், கப்பல், ஆகாய விமானம் என்று அனைத்து வித வண்டிகளையும் சர்வ சாதரணாமாக ஓட்டுவார்கள். 


நமக்குத் தெரியும் அது எல்லாம்சும்மா வெறும் கற்பனை என்று. அவர்கள் செய்வது போல நம்மால் செய்ய முடியாது. நம்மால் ஒரு கையை உயர்த்தி பறக்க முடியுமா? 


எனவே, அது ஒரு பொழுது போக்கு என்று நாம் தள்ளி விடுகிறோம். அந்தக் கதாநாயகர்கள் செய்யும் நல்ல காரியத்தை கூட நாம் அதுவும் ஒரு கற்பனை என்று தள்ளி விடுகிறோம். 


இராமன் ஒரு கதாநயாகன். அவன் நம்ப முடியாத, மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களை மட்டுமே காப்பியம் முழுவதும் செய்து கொண்டிருந்தால், நாம் இராமன் வழியில் நடக்க முடியாது என்று முடிவு செய்து விடுவோம். 


இராமன் அப்படி அல்ல. அவன் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறான். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html


(pl click the above link to continue reading)


மனிதன் என்று கூறினால், மனிதர்களுக்கு உள்ள அத்தனை குறை நிறைகளோடும் இருக்கிறான். 


அவனும் நம்மை மாதிரித்தான் என்று நமக்கு அவன் மேல் ஒரு பிடிப்பு வருகிறது. ஒரு தோழமை வருகிறது. அவன் செய்தது போல நாமும் செய்தால் என்ற எண்ணம் வருகிறது. 


நம்மைப் போல அவன் அழுகிறான், மனைவியின் அழகில் மயங்குகிறான், காதல் வயப்படுகிறான், நல்லது கெட்டது அறியாமல் குழம்புகிறான், நட்பில் குழைகிறான், பிரிவில் தவிக்கிறான்,  தம்பி மேல் பிள்ளை போல் பாசத்தைப் பொழிகிறான், அப்பா மேல் அவ்வளவு பாசம் காண்பிக்கிறான், அம்மாவுக்கு ஒரு தனி இடம் தருகிறான்,  அறிவும் அனுபவமும் கலந்து அறிவுரைகள் வழங்குகிறான்...இப்படி இராமனை நம்மில் ஒருவனாக, அதே சமயம் பால் உயர்ந்த குணங்களை அவனுள் ஏற்றி கம்பன் காட்டுகிறான். 


நம்மாலும் இராமன் போல வாழ முடியும், அவன் போன பாதையில் போக முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறான். 


இராமனை மகனாக, மாணவனாக, காதலனாக, கணவனாக, அண்ணனாக, அறிவு புகட்டும் ஆசானாக, மனைவியை பிரிந்து புலம்பும் சாதாரண மனிதனாக, தம்பியை இழந்து தற்கொலைக்கு முயலும் ஒரு பாசமிகு அண்ணனாக, அண்டியவரை காப்பாற்றும் ஒரு சத்ரியனாக நாம் காண இருக்கிறோம். 


இனி வரும் நாட்களில் இராமனின் பலவித ஆளுமைகளை நாம் கம்பன் ஊடாக இரசிக்கலாம். 


மானுடம் வென்றதம்மா என்பான் கம்பன். 


இராமன் என்ற மானுடனை நாம் சிந்திக்க இருக்கிறோம். 



3 comments:

  1. எத்தனை விதமாக எழுதினாலும் கம்பனின் உயர்வான பாத்திரப்படைப்பை நாம் முழுதுமாக அனுபவித்ததாகச் சொல்லிவிட முடியாது. எனவே உங்கள் வேறுபட்ட பாணியில் இராமகாவியத்தை எடுத்துக்காட்டுங்கள். நிச்சயம் பலருக்கும் பயனளிக்கும்.

    ReplyDelete
  2. உங்களுடைய விளக்கத்தை படித்த பின் மனம் நிறைவு அடைகிறது. நன்றி.

    ReplyDelete
  3. பார்த்தசாரதி

    ReplyDelete