Showing posts with label பெரிய புராணம். Show all posts
Showing posts with label பெரிய புராணம். Show all posts

Saturday, November 24, 2018

பெரிய புராணம் - என் அடியான்

பெரிய புராணம் - என் அடியான் 


பக்தி செலுத்துபவர்களைக் கேட்டால் "இறைவனை வாழ் நாள் எல்லாம் தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள்" என்பார்கள். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பார்கள்.

இறைவனை எப்படித் தேடுவது?

விலாசம் இருந்தால் தேடி கண்டு பிடிக்கலாம். இறைவன் இருக்கும் இடத்தின் விலாசம் தெரியுமா ?

புகைப் படம் இருந்தால் விசாரித்து அறியலாம்? புகைப் படம் இருக்கிறதா ?

ஆள் இப்படி இருப்பார் என்று தெரிந்தலாவது, அக்கம் பக்கம் கேட்டு அறியலாம். இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தெரியுமா ?

எதை வைத்துக் கொண்டு தேடுவது?

சரி, எப்படியோ அவன்/அவள்/அது இருக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். ஆளையும் நேரில் பார்த்தாகி விட்டது. அவர்தான் இறைவன் என்று எப்படி அறிந்து கொள்வது. ஒரு வேளை நாலு கை, நெற்றியில் ஒரு கண், நாலு தலை என்று ஏதாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வேறு மாதிரி இருந்தால்?


இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது என்கிறார் திரு நாவுக்கரசர்.

"இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒண்ணாதே "

என்கிறார்.




மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே



இறைவனே நேரில் வந்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. இந்த இலட்சணத்தில் தேடுவது என்பது எவ்வளவு நகைப்பு உரிய ஒரு செயல் என்று புரிகிறது அல்லவா ?

இறைவன் நேரில் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களாலும் என்னாலும் மட்டும் அல்ல, சுந்தரராலும், மாணிக்கவாசகராலும் நேரில் வந்த இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நம்மால் முடியுமா?

இறைவனே நேரில் வந்து அவனை அறியும் அறிவை நமக்குத் தந்தால் தான் உண்டு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.

நீங்களும் நானும் தேடுவது வியர்த்தம்.


சுந்தரரின் flashback.

சுந்தரர், கைலாயத்தில், சிவ பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். சிவனுக்கு மிக மிக அருகில் இருந்து தொண்டு செய்தவர். ஒரு நாள் அங்கிருந்த இரண்டு பெண்களின் மேல் ஒரு கணம் புத்தி தடுமாறினார். அதை அறிந்த சிவன், "நீ பூ லோகத்தில் போய் பிறந்து, அந்த இரண்டு பெண்களையும் மணந்து, இல்லறத்தில் இருந்து பின் எம்மை அடைவாய் " என்று சபித்து விட்டார்.

பதறிப் போனார் சுந்தரர். "ஐயனே, பூலோகத்தில் பிறப்பது இருக்கட்டும். நீ தான் வந்து என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.

இறைவனும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது கதைக்கு வருவோம்.

சுந்தரர் பிறந்து விட்டார். திருமணம் ஆகப் போகிறது. சொல்லியபடி சிவன் அங்கே வந்து, திருமணத்தை நிறுத்தும்படி  கூறினார். அந்தகிருந்த   மக்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். "யார்ரா இந்த கிழவன்...இப்படி நடுவில் புகுந்து திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறானே " என்று நினைத்தார்கள்.

"ஏன் இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த முதியவர் "இந்த சுந்தரன் எனக்கு அடிமை" என்று கூறினார்.


பாடல்

‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான்.

பொருள்

‘ஆவது இது = நடக்கப் போவது இது

கேண் மின் =கேளுங்கள்

மறையோர்! = மறையவர்களே

என் அடியான் = என்னுடைய அடிமை

இந் நாவல் நகர் ஊரன்; = இந்த நாவல் நகர் ஊரில் பிறந்த இவன்


இது நான் மொழிவது’  = இது நான் சொல்வது

என்றான் = என்றான்

தேவரையும் = தேவர்களையும்

மால் = திருமால்

அயன் = பிரம்மா

முதல் = முதலிய

திருவின் மிக்கோர் = சிறப்பு மிகுந்த

யாவரையும் = அனைவரையும்

வேறு அடிமை யா = வேறு விதங்களில் அடிமையாக

உடைய எம்மான். = உடைய எம் பெருமான்



தன்னை தடுத்து ஆட் கொள்ளும்படி சுந்தரர்தான் வேண்டினார். இறைவன் நேரில்  வந்திருக்கிறான். அவரால் அடையாளம் காண முடியவில்லை.

மாறாக என்ன செய்தார் தெரியுமா ?

அடுத்த ப்ளாகில் பார்ப்போமா ....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html


Monday, November 12, 2018

காரைக்கால் அம்மையார் பாடல் - அறவா

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்  - அறவா 


இறைவன் என்பது யார்? அவர் ஒரு ஆளா? ஆணா ? பெண்ணா ? அலியா ? உயரமா? குள்ளமா ? கறுப்பா ? சிவப்பா?


முதலில் இறைவன் என்பது ஒரு "ஆள்" என்ற எண்ணத்தை விட வேண்டும். இறைவன் என்றால் ஏதோ நம்மைப் போல இரண்டு கை , இரண்டு கால், கண், மூக்கு என்று இருப்பார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனிதர்கள் படைத்த இறைவன் மனிதர்கள் போல இருக்கிறான். சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இறைவனை கற்பனை செய்தால் அது மிகப் பெரிய வலிமையான சிங்க ரூபத்தில் இருக்கும். எனவே, இறைவன் மனித ரூபத்தில் இருப்பான் என்று எண்ணிக் கொள்வது நமது ஆணவம் அன்றி வேறில்லை.


சரி, இறைவன் மனித வடிவில் இல்லை என்றால் பின் எப்படி இருப்பான் ?


இறைவன் எந்த வடிவிலும் இல்லை. அவனுக்கு ஒரு வடிவம் கிடையாது.


பின் இறைவன் என்றால் என்ன ? வடிவம் இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?


அறம் தான் இறைவன். இயற்கை தான் இறைவன்.


அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார் 

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?



பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுகிறார்


பிறவாமை வேண்டும்  =  பிறவாமல் இருக்க வேண்டும்


மீண்டும்  பிறப்புண்டேல்  = ஒரு வேளை மறுபடியும் பிறந்து விட்டால்


உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்


இன்னும் வேண்டும் = இன்னும் என்ன வேண்டும் என்றால்


நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி


அறவா = அறவா , அறமே வடிவானவனே


நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது உன்


அடியின்கீழ் இருக்க என்றார் = உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார்.


இறைவன் அறமே உருவானவன் என்பது ஒரு செய்தி.

நம்மில் பல பேர் பக்தி என்றால் ஏதோ பெரிய இராணுவ பயிற்சி போல குளித்து முழுகி, முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, பய உணர்வு ஒரு பக்கம், பக்தி ஒரு பக்கம்,  என்று பக்தி செலுத்துவார்கள்.

கற்பூர ஆரத்தி காட்டுவதும், பூ அள்ளிப் போடுவதும் ஏதோ அறிவியல் செயல் கூடத்தில்  (laboratory) ஏதோ அறிவியல் கோட்பாட்டை சரி பார்க்கும் முயற்சி போல இருக்கும்.


வேண்டவே வேண்டாம்.


முதலில் சந்தோஷமாக இருக்கும் வேண்டும்.  இன்ப அன்பு வேண்டும்.


அடுத்து, மகிழ்ந்து பாடி என்கிறார். சந்தோஷமாக வாய் விட்டு பாடுங்கள்.


மூன்றாவதாக, இறைவனே ஆடிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு லீலை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருங்கள். பக்தி என்றால் ஏதோ surgical strike  மாதிரி இருக்கக் கூடாது.


"விளையாட்டு உடையார் அவர் , தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பார்  கம்பர். எந்த கடவுள் விளையாட்டாக இருக்கிறாரோ, அவர் தான் எங்கள்  தலைவர் என்கிறார் கம்பர்.



வாழ்க்கையை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டாக  எடுங்கள்.


ஆடுங்கள். பாடுங்கள். அன்பு செய்யுங்கள்.


அவ்வளவுதான் வாழ்க்கை. அவ்வளவுதான் இறைவன்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_12.html



Saturday, July 22, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும்

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும் 


மனு நீதி சோழனின் மகன், பட்டத்து இளவரசன், தேரில் சென்று கொண்டு இருக்கிறான். அப்போது யாரும் காண்பதற்குள் ஒரு இளம் கன்று துள்ளி ஓடி வந்தது என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அப்படி துள்ளி வந்த கன்று, தெரியாமல் தேர் செல்லும் வழியில் குறுக்கே வந்தது. அதனால், அந்தத் தேரின் பொன்னால் ஆன சக்கரம் அந்த கன்றின் மேல் ஏறியது. கன்று இறந்து போனது. இறந்த கன்றைக் கண்டு தாய் பசு வருத்தியது.

பாடல்

அம்புனிற் றாவின் கன்றோ ரபாயத்தி னூடுபோகிச்  
செம்பொனின் றேர்க்கான் மீது விசையினாற் செல்லப்பட்டே
உம்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந்தோடி
வெம்பிடு மலறுங் சோரு மொய்ந்நடுக் குற்று வீழும்.

சீர் பிரித்த பின்

அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி 
செம்பொனின் தேர் கால் மீது மீது விசையினால் செல்லப்பட்டே
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகும் தாய் அலமந்து ஓடி 
வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுங்குற்று வீழும் 

பொருள்


அம்அ =அந்த

புனிற்று  = அப்போது தான் பிறந்த

ஆவின் = பசுவின்

கன்று = கன்று

ஓர் = ஒரு

அபாயத்தின் = அபாயத்தின்

ஊடு போகி = இடையே சென்று

செம்பொனின் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

தேர் கால் மீது = தேரின் சக்கரத்தின் மீது

விசையினால் = வேகமாக

செல்லப்பட்டே = செலுத்தப்பட்டே

உம்பரின் = தேவர் உலகை

அடைய கண்டு = அடையக் கண்டு

அங்கு  =  அந்த இடத்தில்

உருகும் = மனம் இறுகும்

தாய் = தாய் பசு

அலமந்து ஓடி = எ அங்கும் இங்கும் திசை தெரியாமல் ஓடி

வெம்பிடும் = மனம் வருந்திடும்

அலறும் = வாய் விட்டு அலறும்

சோரும் = சோர்ந்து இருக்கும்

மெய் = உடல்

நடுங்குற்று = நடுக்கம் கொண்டு

வீழும் = கீழே விழும்

ஒரு பசுவின் சோகத்தை சொல்ல எத்தனை வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உருகும் - அலமந்து - ஓடும் - வெம்பும்  - அலறும் - சோரும் - மெய் நடுங்குறும் - வீழும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை

என்பார் பேராசான் வள்ளுவர்.

பசுதானே, விலங்கு தானே என்று விட்டு விடவில்லை. புதிதாக கன்றை ஈன்ற பசு  , தன் கன்றை நாவால் நக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்காது.

"கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே" என்பார் மணிவாசகர்.

(கற்றா  = கன்றை ஈன்ற பசு )

விலங்குகளை வேட்டையாடுவதும், அவற்றை கொன்று தின்பதும் நிறைந்த இந்தக் காலத்தில், உயிர்கள் மேல் அருள் செலுத்தும் இது போன்ற நூல்கள் கட்டாயம் தேவை.


மனிதன் உணர்வுகள் நாளாக நாளாக மழுங்கி கொண்டே போகிறது. விலங்கை கொல்வது சரி , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கத் தொடங்கும் போது , நாளடைவில் மனிதர்கள் கொல்லப் படுவதும் பெரிய  விஷயம் இல்லை என்று ஆகி விடும்.

"அந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் ?"

"ஒரு நாலஞ்சு பேர் இருக்கும் "

"ஓ..அவ்வளவுதானா "

என்று கேட்டு விட்டு மேலே போய் கொண்டே இருக்கும் காலம் வந்து விட்டது.

மனித மனதில் ஈரத்தை கொண்டு வர, மனித மனதில் அன்பையும், அருளையும் கொண்டு  வர இது போன்ற உயரிய நூலகளை படிக்க வேண்டும்.

பொழுது போகாமல் அல்ல, ஒரு கன்னுக்குட்டி இறந்ததை பாட்டாக பாடி வைத்தது.

ஒன்றிப்  படித்தால்,நம் விழி ஓரம் ஈரம் கசியலாம்.

அது அருள். அந்த அருள் வீடு பேற்றை நோக்கி நம்மை செலுத்தும்.

இன்னொரு முறை பாடலை வாசித்துப் பாருங்கள்.

மனம் இலேசாக அதிர்ந்தால் , உங்களுக்குள்ளும் அன்பும், அருளும் இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2017/07/blog-post_22.html

Wednesday, July 19, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி 


அருள் !

அருள் என்றால் என்ன ?

நம் பிள்ளை தடுக்கி கீழே விழுந்து விட்டால் , நம் மனம் பதறுகிறது. அது அன்பு.

அந்த பதற்றம் வேறு ஏதோ பிள்ளை விழும்போதும் வந்தால் அருள்.

தொடர்புடையவர் மேல் வருவது அன்பு. தொடர்பு இல்லாதவர் மேலும் வருவது அருள்.

டிவி யில் எங்கோ ஒரு தேசத்தில் பசித்த சின்ன குழந்தைகளை காட்டும் போது ஐயோ என்று மனம் கேவினால், அது அருள்.

எங்கேயோ குண்டு போட்டு, இடிபாட்டுக்கு இடையில் இருந்து அடிபட்ட பிள்ளையை தூக்கிக் கொண்டு வரும் அந்த பெயர் தெரியாத தந்தையை பார்த்து மனம் வருந்தினால், அது அருள்.

அந்த அருள் இன்னொரு மனிதன் மேல் வரலாம்.

விலங்கின் மேல் வரலாம் . சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் தசையை அறுத்துக் கொடுத்தான். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் என்ற அரசன்.

அந்த அருள் மேலிடும் போது செடி கொடி மேலும் வரும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம்  வாடினேன் என்றார் வள்ளலார். அவர் அருளின் எல்லை அது.

உயிர் இல்லாத கல்லின் மேல் அருள் பிறந்தது கண்ணப்பருக்கு.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

என்பார் வள்ளுவர்.

பசுவுக்கு அருள் செய்த மனு நீதி சோழனின் கதையை தெய்வப் புலவர் சேக்கிழார் கூறுகிறார்.

"தர்ம தேவதை , மனு நீதி சோழனின் உண்மையான  மனதை உலகுக்கு காட்ட நினைத்தான். அப்போது, யாரும் பார்ப்பதற்கு முன்னால் , ஒரு இளம் கன்று துள்ளி குதித்து தெருவின் குறுக்கே பாய்ந்தது "

பாடல்

தனிப் பெருந் தருமம் தான் ஓர் தயா இன்றித் தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன,
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளிப் போந்தது அம் மறுகின் ஊடே.


பொருள்

தனிப் பெருந் தருமம் = தனி பெரும் தர்மம்

தான் = அது

ஓர் = ஒரு

தயா இன்றித் = கருணை இல்லாமல்

தானை = படை கொண்ட

மன்னன் = மன்னவனின்

பனிப்பு இல் =  நடுக்கம், அச்சம் இல்லாத

சிந்தையினில் = சிந்தனையினில்

உண்மைப் பான்மை = உண்மை தன்மையை

சோதித்தால் என்ன = சோதித்தால் என்ன என்று

மனித்தர் = மனிதர்கள்

தன் = தன்னுடைய

வரவு = வரவை

காணா வண்ணம் = காணாத வகையில்

ஓர் = ஒரு

வண்ணம் நல் = நல்ல வண்ணம் உள்ள

ஆன் = ஆவின், பசுவின்

புனிற்று இளம் கன்று = பிறந்த சில நாட்களே ஆன கன்று

துள்ளிப் போந்தது = துள்ளி போனது

அம் மறுகின் ஊடே. = அந்த தெருவின் ஊடே

எளிமையான பாடல் தான். சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.



"தனிப் பெருந் தருமம்" - உலகிலேயே பெரியது தர்மம்தான். அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அது தனித்துவமானது மட்டும் அல்ல எல்லாவற்றையும் விட உயர்ந்தது தர்மம்.


"தான் ஓர் தயா இன்றித்" = தர்மம் என்பது கருணையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு தாய் தன் பிள்ளையை அடித்து திருத்துவது மாதிரி. அதில் கோபம் இருந்தாலும், அருளே மிகுந்து நிற்கும்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே என்பார் குலசேகர ஆழவார்.


தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே


அப்படி அருளோடு இருக்க வேண்டிய தர்மம் அருள் இன்றி , மன்னவனை சோதிக்க எண்ணி.


மனித்தர் தன் வரவு காணா வண்ணம் = கன்று வருவதை மக்கள் காண மாட்டார்களா ? அது என்ன சின்ன எறும்பா, கொசுவா மனிதர்கள் காணாமல் இருக்க ? கன்று வந்தது தெரியும். அது ஏன் வந்தது என்று தெரியாது. தர்மத்தின் செயல்பாடுகள் கண்ணுக்குத் தெரியாது.

யார் பார்க்கப் போகிறார்கள் என்றுதான் எவ்வளவோ தவறுகளை மனிதர்கள் செய்கிறார்கள். அறம் பார்த்துக் கொண்டேதான் இருக்கும்.

கன்று வருவது தெரிகிறது. அது வந்த காரணம் தெரியவில்லை. கண் முன்னால் நடப்பதற்கே காரணம் தெரியவில்லை. கன்னுக்குத் தெரியாமல் நடப்பவற்றை நாம் எவ்வாறு அறிவோம் ?

ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அவ்வளவு அர்த்தம்.

கதையை மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_19.html

Saturday, July 8, 2017

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய 


சடையனார் என்பவருக்கும், இசை ஞானியாருக்கும் பிள்ளையாக சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தார்.

இது செய்தி.

இதைச் சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

தமிழ் கொஞ்சுகிறது.

பாடல்

மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்  
  வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி 
                                யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார்.

பொருள்

மாதொரு பாக னார்க்கு = மாது + ஒரு + பாகனார்க்கு = பெண்ணை ஒரு உடம்பின் ஒரு பக்கத்தில் உடையவர்க்கு . அதாவது சிவ பெருமானுக்கு

வழிவழி யடிமை செய்யும்  = வழி வழி அடிமை செய்யும்.

அது என்ன வழி வழி ? ஒரு முறை சொன்னால் போதாதா ?

தாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழியிலும் சிவத் தொண்டு செய்து வந்த குடும்பம்.  எனவே வழி வழி என்று கூறினார்.

வேதியர் குலத்துட் =  வேதியர் குலத்தில. வேதம் ஓதும் குடும்பத்தில்.  வேதம் என்பது வீட்டுப் புழக்கமாக இருந்திருக்கிறது.

டோன்றி = தோன்றி

மேம்படு சடைய னாருக் = மேன்மை மிகுந்த சடையனாருக்கு

கேதமில் கற்பின் = கேதம் என்றால் துக்கம்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

கேதமில் கற்பு என்றால் குற்றமற்ற கற்பு, தீமையற்ற கற்பு.

வாழ்க்கை = வாழ்க்கை

மனை = மனைவியான

யிசை ஞானியார்பாற் = இசை ஞானியார் பால். அவரிடம்

றீதகன் றுலக முய்யத் = தீது அகன்று உலகம் உய்ய

திருவவ தாரஞ் செய்தார்= திரு அவதாரம் செய்தார்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

என் வீடு, என் குடும்பம், என் சமயத்தில் உள்ளவர்கள், என் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இன்பமாக வாழ்ந்தால் போதும் என்று சேக்கிழார் போன்ற பெரியவர்கள் நினைக்கவில்லை.

அவர்களிடம் உலகம் பற்றிய சிந்தனை  இருந்தது.

உலகம் நன்றாக இருக்க வேண்டும் விரும்பினார்கள். உலகம் என்றால் உலகில் உள்ள மக்கள். இடவாகு பெயர்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்பார் சேக்கிழார்

உலகம் யாவையும் தாம் உள வாக்கிலும் என்பார் கம்பர்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . .

என்று தொடங்குகிறார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப என்றால் உலகம் மகிழ என்று அர்த்தம்.

நான் மகிழ, என் வீட்டில் உள்ளவர்கள் மகிழ, என் சாதிக்காரர்கள் மகிழ என்று வேண்டவில்லை. உலகில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று  பாடினார் நக்கீரர்.

உலகளாவிய சிந்தனை இருந்திருக்குறது.

உலகிலே தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சுந்தரர் காலத்திலும் தீமைகள் இருந்திருக்கின்றன.

அந்தத் தீமைகள் எல்லாம் விலகி, உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான்.


தீமைகள் நீங்காவிட்டால் உலகம் அழித்து போகும்.

நன்மைகள் பெருகி உலகம் உய்ய என்று சொல்லி இருக்கலாம்.

எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், கொஞ்சம் தீமை இருந்தால் அது நல்லவைகளை சிறுமை படுத்தி விடும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்பார் வள்ளுவர்.

மனத்துக்கண் நல்லவன் ஆதல் அறம் என்று சொல்லி இருக்கலாம்தானே ? சொல்லவில்லை. மாறாக, மாசிலன் ஆதல் என்று கூறுகிறார்.

தீமைகளை விலக்கி விட்டால், நன்மை தானே வரும்.

"அவதாரம் செய்தார் " அவதாரம் என்றால் மேலிருந்து கீழ்  வருவது. வந்த பின் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடுவது.

இராமனை இருகை வேழத்து இராகவன் என்பார் கம்பர்.

ஏன் இராமனை யானையோடு ஒப்பிடுகிறார் ?

யானையின் காலைப்  பிடித்தால்,அது நம்மை தலைக்கு மேலே தூக்கி முதுகில் உட்கார வைத்துக் கொள்ளும்.

இராகவனும் , அவனுடைய பாதங்களை பிடித்தவர்களை மேலே தூக்கி விடுவான்.

நம்மை உயர்த்த வந்த  யாருமே அவதாரம் தான்.

கீழிருப்பது மேலே செல்வதற்காக , மேலிருந்து ஒன்று கீழே வருவது அவதாரம் என்று பெயர்.

உலகம் தீமைகளில் இருந்து விடப்பட்டு உய்வடைய சுந்தர மூர்த்தி நாயனார்  அவதாரம் செய்தார்


பெரிய புராணத்து தமிழ் சொற்கள் ஆழம் மிகுந்தவை. பொருட்ச்செறிவு நிறைந்தவை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_8.html


Friday, June 23, 2017

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்


புற இருளை எவ்வாறு சூரியன் போக்குகிறதோ , அது போல அக இருளை நீக்க வந்தது இந்த பெரிய புராணம் என்று பாயிரத்தில் குறிக்கிறார் சேக்கிழார்.

இருள் , தான் எவ்வளவு தான் முயன்றாலும் அது தன்னை தானே வெளிச்சமாகிக் கொள்ள முடியாது.

அது போல, அக இருளை நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நாமே அதே போக்கிக் கொள்ள முடியாது. குருவருளும் , இறை அருளும் தேவை . இறைவனின் அருள் இல்லாமல் அது நிகழாது என்பதை பெரிய புராணம் முழுவதும் நாம் காண முடியும்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"  என்பார் மணிவாசகர்.

பெரிய புராணத்தில் முதல் கதை தடுத்தாட்கொண்ட புராணம்.

ஒரு பிரச்சனை, தவறு , சிக்கல் நிகழப் போகிறது என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் அதை தடுத்து நிறுத்தி, அதை செய்ய  இருந்தவர்களை அதில் இருந்து காப்பாற்றுவது தடுத்து + ஆண்டு + கொள்வது.

சுந்தரர், திருமணம் செய்து கொள்ள  இருந்தார். அப்போது சிவ பெருமான், வயோதிக வேதியர் வடிவில் வந்து, "இந்த சுந்தரன் எனக்கு அடிமை. இவனுடைய தாத்தா எனக்கு ஓலை எழுதி தந்திருக்கிறார். எனவே இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது " என்று தடுத்தார்.

சுந்தரர் வாது புரிகிறார். "பித்தா " என்று அந்த வேதியரை ஏசுகிறார்.

வேதியர் ஓலையை காண்பிக்கிறார்.  அந்த ஓலையை வாங்கி கிழித்துப் போட்டு விடுகிறார் சுந்தரர். வேதியர் விடுவதாய் இல்லை. "இது படி (copy ) ஓலை தான். மூல ஓலை என்னிடம் இருக்கிறது " என்று எல்லோரையும் கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கிறார். ஊரில் உள்ள எல்லோரும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். சுந்தரர் அடிமைதான் என்று சொல்லி விடுகிறார்கள்.

பின், சிவன் தன் சுய உருவத்தை காட்டி , "நீ இந்த சம்சார சாகரத்தில் கிடந்து அழுந்தாமல் இருக்கவே வந்து உன்னை தடுத்தாட்கொண்டேன்" என்று அருள் புரிகிறார்.

"என்னை பித்தா என்று திட்டினாய் அல்லவா, எனவே என்னை பித்தா என்றே ஆரம்பித்து பாடு " என்றார்.

"பித்தா  பிறை சூடி, பெருமானே அருளாலா " என்று பாடுகிறார்.

அந்தக்  கதைதான் நாம் பார்க்கப் போகிறோம்.

முதல் பாடல் சுந்தரர் பிறந்த நாட்டின் பெருமையை பற்றி பேசுகிறது.

பாடல்  

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு,
மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச்
செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.

பொருள்


கங்கையும்  = கங்கை நதியும்

மதியும் = நிலவும்

பாம்பும்  = பாம்பையும்

கடுக்கையும் = கொன்றை மலர்

முடி மேல் வைத்த = முடி மேல் வைத்த

அங்கணர் = அழகிய கண்ணை உடைய அவர் (சிவன்)

ஓலை காட்டி = ஓலையை காட்டி

ஆண்டவர் = ஆட்கொண்ட

தமக்கு நாடு = உரிமையாகக் கொண்ட நாடு

மங்கையர் = பெண்கள்

வதன = முகம்

சீத = குளிர்ச்சியான

மதி = நிலவு போன்ற

இரு மருங்கும் ஓடிச் = இரண்டு பக்கமும் ஓடி

செங் கயல் = சிறந்த மீன்கள்

குழைகள் = காதில் அணியும் ஆபரணங்களை

நாடும் = தேடும்

திருமுனைப்பாடி நாடு = திருமுனைப்பாடி  என்ற நாடு



நாடு நன்றாக  இருக்கிறது என்று சொல்ல வந்த சேக்கிழார் அதை  எப்படி சுருக்கமாக சொல்வது என்று யோசித்து சொல்கிறார்.

பெண்களின் முகம் குளிர்ந்த நிலவைப் போல இருந்தது என்கிறார் . பெண் மகிழ்ச்சியாக இருந்தால்  அவள், இருக்கும் வீடும், சமுதாயமும்,  நாடும் சிறந்து  விளங்கும். தான் இருக்கும் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் பெண் மகிழ்ச்சியாக இருப்பாள். எல்லா பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றால் , அங்குள்ள எல்லா குடும்பங்களும் மகிழ்வாக இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்ல, அவர்களின் மீன் போன்ற கண்கள் , அவர்களின் காதில் உள்ள குழையை தேடி போனதாம்.  கண்கள் நீண்டு இருந்தன என்று சொல்கிறார்.  நீண்ட கண்கள் பெண்களுக்கு ஒரு அழகு.

உறவுகள் கண்ணில் தொடங்கி , காதின் வழியே உறுதி அடைகின்றன.

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்தவுடன் ஏதோ ஒன்று பிடித்துப் போகிறது. எனக்கேற்ற பெண் / ஆண் இவள்/இவன் தான் என்று மனதில் எங்கோ பட்சி சொல்கிறது.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமாய் அவளோடு பேசி , அவள் பேசுவதை கேட்டு மேலும் பிடித்துப் போகிறது.

காதல் கண்ணில் ஆரம்பிக்கிறது.

உருவ வழிபாடு அது தான். பார்த்தவுடன் பக்தி வருகிறது. பின் இறைவனைப் பற்றி கேட்டு, படித்து அறிந்து கொள்கிறோம்.

அதை சொல்ல வந்த சேக்கிழார், அந்த ஊரில் உள்ள பெண்களின் கண்கள் காது வரை நீண்டு இருந்தது என்று  கூறுகிறார்.

சுந்தரை  -  ஓலை காட்டி ஆண்டார்
ஞான சம்பந்தரை  - பாலை (ஞானப்பால்) தந்து ஆண்டார்
மணி வாசகரை - காலை (திருவடி) காட்டி ஆண்டு கொண்டார்
நாவுக்கரசரை -  சூலை நோய் தந்து ஆண்டு கொண்டார்

இவைகள் வெறும் கதைகள் அல்ல. மிகப் பெரிய தத்துவங்களை சொல்ல வந்த ஒரு ஊடகம். அந்தத் தத்துவம் என்ன என்று பெரிய புராணம் முழுவதும் படித்தால் புரியும்.

நேரம் இருப்பின், முடிந்தவரை, தெரிந்தவரை பகிர்ந்து கொள்ள ஆசை.

Saturday, June 17, 2017

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க 


இன்று ஆன்மீக உலகில் உள்ள பெரிய சிக்கல் என்ன என்றால், ஒவ்வொருவரும் அவர்கள் கொண்ட கொள்கை தான் உண்மையானது, மற்றது எல்லாம் தவறு என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மதமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்கின்றன. தங்கள் தெய்வம் தான் மற்ற எல்லா தெய்வங்களை விடவும் உயர்ந்தது என்று அடம் பிடிக்கிறார்கள். மதங்கள் மட்டும் அல்ல, மதங்களின் உட் பிரிவில் உள்ளவர்களும் தங்கள் பிரிவே உயர்ந்தது என்று சாதிக்கிறார்கள்.

இதனால்  பல சண்டைகள் , சச்சரவுகள். போர்கள். உயிரிழப்பு. சதா தொல்லை.

அது ஒரு புறம் இருக்க, எது உண்மையை கண்டறியும் வழி ? இறைவனை, இயற்கையை, பிரபஞ்ச சக்தியை அறிய எது வழி ?

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல வித மார்க்கங்களை சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று சாதாரண மனிதன் குழம்புகிறான்.

அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத் வைதம் என்று பல வித கோட்பாடுகளை சொல்கிறார்கள். இவற்றை படித்து, அறிந்து தெளிய நேரம் இல்லை.

யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது ? எதைப் படித்து அறிந்து கொள்வது ? யாரை நம்புவது ? நாட்டில் பல போலி சாமியார்கள் அலைகிறார்கள். யார் உண்மையானவர் , யார் போலி என்று எப்படி இனம் கண்டு கொள்வது ?

இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் விடை தருவது பெரிய புராணம்.

ஒரு நூலை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்டால் அதை எழுதிய ஆசிரியனே ஒரு கணம் திகைப்பான்.

இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும் ? இராமாயணத்தில் ஆயிரம் செய்தி  இருக்கிறது. எதை என்று சொல்லுவது ? சற்று சிக்கலான காரியம்.

திருக்குறளை எதற்குப் படிக்க வேண்டும் ?

கீதையை எதற்குப் படிக்க வேண்டும் ?

என்றெல்லாம் கேட்டால், படித்தால் நல்லது, வழி காட்டும் என்று பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்லலாம்.

சேக்கிழார் சொல்கிறார் - பெரிய புராணத்தை எதற்குப் படிக்க வேண்டும் என்று. ஒரே வரியில் சொல்கிறார்.

"அக இருளை நீக்க "

பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று.

எப்படி சூரியன் புற இருளை நீக்குமோ, அது போல , அக இருளை நீக்க இந்த நூல் உதவும் என்கிறார்.

பாடல்

 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற 
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்


 இங்கிதன் = இங்கு இதன் (இந்த புத்தகத்தின்)

 நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

 இவ் உலகத்து  = இந்த உலகில்

முன்னாள்  = முன்பு

 தங்கிருள் =தங்கிய இருள்கள்

இரண்டில் =  இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

இருளை = இருளை

ஏனைப் = மற்றைய

புற இருள் = வெளி இருளை

போக்கு கின்ற = நீக்கு கின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = நீக்கும்

திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம்

என்பாம் = என்று சொல்லுவோம்

புற இருளை சூரியன் நீக்குவது போல, அக இருளை நீக்குவது இந்த புராணம்.

தங்கிய இருள் என்கிறார்.

இருள் ரொம்ப நாள் தங்கி இருக்கிறது.

சரி, ரொம்ப நாள் இருண்ட வீடாயிற்றே என்று அதில் வெளிச்சம் கொண்டு வர வேண்டும் என்றால், அதே போல ரொம்ப நாள் ஆகாது. ஒரு தீக்குச்சியை உரசிய மாத்திரத்தில் வெளிச்சம் வரும், இருள் விலகி விடும்.

அறிவு என்ற தீ பற்றிக் கொண்டால், அறிவீனம் என்ற இருள் உடனே விலகி விடும். எத்தனை நாளாக நாம் அறியாமையில் இருந்தோம் என்பதல்ல கேள்வி.

ஒரு நொடியில் அந்த அறியாமை விலகும்.

வெளியில் உள்ள இருளுக்கும், மனதுக்குள் இருக்கும் இருளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

"சிந்தையுள் சார்ந்து , நின்று, பொங்கிய" இருள் என்கிறார் சேக்கிழார்.

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

நமது மனதுக்குள் இருக்கும் இருள் இருக்கிறதே, அது நமது சிந்தனையை சார்ந்து நிற்கிறது. பற்றிக் கொண்டு நிற்கிறது. நிலைத்து நிற்கிறது. உள்ளேயே பொங்குகிறது. 

சற்று சிந்திப்போம். 

முதலில் நமது அறியாமை நமக்குத் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று  நாம் நினைக்கிறோம். நாம் அறிந்தவை தான் சரி என்று வாதிக்கிறோம். என் மதம், என் கடவுள்  என்று சொந்தம் கொண்டாடுகிறோம். அது நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. எத்தனையோ நாள்  இந்த அறியாமையில் மூழ்கி கிடந்ததால், அது பழகிப் போய் விடுகிறது. அசுத்தத்திற்கு நடுவில் வாழ்பவனுக்கு , அந்த துர் நாற்றம் பழகிப் போய் விடுவதைப் போல , அறியாமை நமக்கு பழகி போய் விடுகிறது. 


யாரவது நம் அறியாமையை சுட்டிக் காட்டினால் , அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அவரை கொல்ல முயல்கிறோம். 

சாகரடீஸ், இயேசு கிறிஸ்து, முகமது நபி, புத்தர் என்று உண்மையை யார் கண்டு சொன்னாலும், அவர்கள் மேல் சாதாரண மக்கள் கோபம் கொள்கிறார்கள்.  காரணம், அவர்கள், அந்த மக்களின் அறியாமை வெளிச்சம் போட்டு  காட்டுகிறார்கள். 

"நின்று "  நம் அறியாமை வந்து வந்து போவது இல்லை. எப்போதும் நம்முடனையே நிலைத்து நிற்கிறது. 

"பொங்கிய" ...இந்த அறியாமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு முட்டாள் சொல்வதை , இன்னொரு முட்டாள் கேட்டு இப்படியே அது  பெரிதாகிக் கொண்டே போகும். 

இதை நீக்கி, அறிவை அடைய இந்த திருத் தொண்டர் புராணம் வந்தது என்கிறார். 

எப்படி என்று பார்ப்போம். 


Monday, June 12, 2017

பெரிய புராணம் - அறிமுகம்

பெரிய புராணம் - அறிமுகம் 


பெரிய புராணம் பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறை.

63 நாயன்மார்களின் வரலாறுகளை கூறுவது.

பெரிய புராணத்தை பலர் , பல வழிக்களில் பார்த்தது, இரசித்து, வணங்கி எழுதி இருக்கிறார்கள்.

பிள்ளை பாதி, புராணம் மீதி என்று சொல்லுவார்கள். மொத்த பாடலில் , திருஞான சம்பந்தரைப் பற்றிய பாடல்கள் பாதி பாடல்கள். மீது 62 நாயன்மார்களின் புராணங்களும் மற்றொரு பாதி.

பெரிய புராணம் ஒரு புராணமே இல்லை. இது பல்வேறு நாயன்மார்களின் வாழ்க்க்கை வரலாற்று தொகுப்பே என்று கூறுவாரும் உள்ளனர்.

அதை மறுத்து, இல்லை, சுந்தரர் என்ற ஒரு நாயனாரின் வாழ்வை மையமாக வைத்து எழுதப் பட்டதுதான் இந்த பெரிய புராணம் என்று கூறுவாரும் உள்ளனர்.

இந்த பெரிய புராணம் தோன்றிய வரலாறே சுவாரசியமானது.

அநபாய சோழன் என்ற ஒரு சோழ அரசன் பல சிற்றின்ப நூல்களை படிப்பதில் காலம் செலவழித்து வந்தான்.

மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பது போல, மக்களும் அந்த வழியில் சென்று கெட்டு விடுவார்களே என்று அறிந்த , அமைச்சரான சேக்கிழார் , அரசனை  நல்ல நூல்களை படிக்கும் படி அறிவுரை வழங்கினார்.

நல்ல நூலகள் என்றால் எது என்று கேட்டான்.

திருத் தொண்டர்களின் வரலாற்றை படிக்கும்படி கூறினார்.

அது எங்கு இருக்கிறது என்று கேட்டான்.

"அது தொகுக்கப்படாமல் இருக்கிறது" என்றார் சேக்கிழார்.

"சரி, அப்படி என்றால் நீரே அந்த நூலை எழுதும் " என்று சொல்லிவிட்டான் அநபாய சோழன்.

அரச கட்டளை ஆயிற்றே , மீற முடியுமா ?

முதலமைச்சர் பதவியை துறந்து விட்டு, புராணம் எழுத முற்பட்டார் சேக்கிழார்.

எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பினார்.

நேரே சிதம்பரம் சென்று நடராஜரிடம் முறையிட்டார்.

"உலகெல்லாம் " என்று ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க , பெரிய புராணம்  பாடத் தொடங்கினார்.

பெரிய புராணத்தில் அப்படி என்ன சிறப்பு ? அது சொல்லும் சேதி என்ன ? ஒரு கம்ப இராமயணமோ , சிலப்பதிகாரமோ மக்களை சென்று அடைந்த மாதிரி பெரிய புராணம் சென்று அடைந்ததா ?

சிந்திப்போம்




Tuesday, November 22, 2016

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?


பிள்ளைகள் எதற்கு என்று கேட்டால், "எனக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டாமா ?" என்று சிலர் கூறுவார்கள்.

அவர்கள் விரும்பியபடியே பிள்ளை பிறக்கும்...கொள்ளி போட ...சில சமயம் உயிரோடு இருக்கும் போதே கூட.

சிலர் , "எனக்குப் பிறகு இந்த சொத்தை எல்லாம் ஆள ஒரு வாரிசு வேண்டாமா ?" என்று பிள்ளை பெறுவதற்கு காரணம் சொல்லுவார்கள். அவனுக்கு வரும் பிள்ளை, அவன் மேல் கோர்ட்டில் கேஸ் கொடுக்கும்...."சொத்தை பிரித்து தா"..என்று.

இன்னும் சிலரோ, "வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பிள்ளை வேண்டாமா " என்று கேட்பார்கள்.

இதெல்லாம் சுயநலத்தில் இருந்து எழும் ஆசைகள்.

திருஞான சம்பந்தரின் தந்தையார் , தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்தார். எதற்காக தெரியுமா ?

பாடல்

மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.


சீர் பிரித்த பின் 

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடி கமல 
நினைவுற முன் பர சமய நிராகரித்து, நீறாக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெற ப் போற்றும் தவம் புரிந்தார்.


பொருள் 

மனை = வீடு

அறத்தில்= அறத்தில்

இன்பம் = இன்பம்

உறு = பெறும் , பெற

மகப் = பிள்ளைகளை

பெறுவான் = பெறுவதற்காக

விரும்புவார் = விரும்பி

அனைய = அந்த

நிலை = நிலையில்

தலை = சிறப்பாக

நின்றே = நின்றே

ஆடிய = ஆடிய

சேவடி = சிவந்த திருவடிகளை

கமல = தாமரை போன்ற

நினைவுற = மனதில் நினைத்து

முன் = முன்பு

பர = மற்ற

சமய = சமயங்களை

நிராகரித்து = நிராகரித்து

நீறாக்கும் = திருநீற்றின் பெருமையை விளங்கும்படி செய்து

புனை = அணியும் (புனைந்து கொள்ளுதல் )

மணிப்பூண் = மணிகள் கொண்ட பூணை

காதலனைப் = காதல் கொண்ட மகனை

பெறப் = பெறுவதற்காக

போற்றும் = போற்றுதலுக்கு உரிய

தவம் புரிந்தார் = தவத்தினை செய்தார்

பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி பேச வந்த வள்ளுவர் கூறுவார்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பெறக் கூடியவற்றில் அறிவான பிள்ளைகளை பெறுவதைத் தவிர சிறந்தது ஒன்றும் இல்லை என்றார். 

அழகான பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை என்று சொல்லவில்லை ... அறிவான பிள்ளை என்றார். 

திருஞான சம்பந்தரின் தந்தையார் பிள்ளை வேண்டி தவம் இருந்தார்...

எதற்காக பிள்ளை வேண்டினார் ?

இல்லறத்தில் இருந்து பெறும் இன்பம் பிள்ளைகள் மூலம் வரும். 

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், அவர் பேசுவதைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பார் வள்ளுவர். 

அந்த இன்பத்தை பெற தவம் செய்தார்.

அது மட்டும் அல்ல. 

"பர சமய நிராகரித்து, நீறாக்கும்"

மற்ற சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்ய பிள்ளை வேண்டும் என்று  தவம் செய்தார். 

பிள்ளைகளை பெறுவது , மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு. 

கொள்ளி வைப்பதற்கோ, சொத்தை அனுபவிப்பதற்கோ அல்ல.

பர சமயங்களை ஏன் நிராகரிக்க வேண்டும் ?

மக்கள் எது உண்மை, எது தவறு என்று அறியாமல் தடுமாறிய சமயம். 

எது அறம் , எது அறம் அல்லாதது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம். 

பலப் பல சமயங்கள். ஆளுக்கு ஒன்றை கூறுகிறார்கள். பாமர மக்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது.  

உண்மை புரியாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த நேரம். 

அந்த நேரத்தில், மற்ற பொய்யான சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமை விளங்க ஒரு புதல்வன் வேண்டும் என்று தவம் செய்தார். 

மக்கள் உய்யும் பொருட்டு பிள்ளை வேண்டினார்.

அது தான் கருத்து. 

நம் பிள்ளைகளும், வீட்டுக்கு மட்டும் இன்றி நாம் வாழும் சமுதாயத்துக்கும், இந்த  நாட்டுக்கும்,மற்றைய உயிர்களுக்கும்  பயன் படும்படி வாழ நாம் கற்றுத் தர வேண்டும். 

தேவர்கள் , சிவனை வேண்டி , தங்கள் துயர் தீர்க்க ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டினர். முருகன் தோன்றினான். 

ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.

என்பது கந்த புராணம். 

தயரதனுக்கு நீண்ட நாள் பிள்ளை இல்லை. அவனுடைய குல குருவான வசிட்டரிடம் சென்று தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கூறினான். பிள்ளை எதற்கு தெரியுமா ? தனக்கு பின்னால் அரசை ஆள  அல்ல.

தனக்குப் பின்னால் , இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள் ? அவரக்ளை காக்க வேண்டுமே என்ற கவலையில் பிள்ளை வேண்டினான். 

‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.

என்பது கம்ப இராமாயணம். 

அறுபதினாயிரம் ஆண்டுகள் , பகைவர்களை ஒடுக்கி, இந்த உலகை நான் காத்து வந்தேன். வேறு ஒரு குறையும் இல்லை. எனக்குப் பின் இந்த வையகம் துன்பப் படுமே என்று ஒரு வருத்தம் இருக்கிறது என்று கூறினான். 

இந்த உலகைக் காக்க ஒரு பிள்ளை வேண்டினான். அப்படியே பெற்றான்.  

பிள்ளைகளைப் பெறுவது, உலக நன்மைக்காக என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. 

பெரிய புராணம் காட்டும் வழியும் அதுவே. 


 

Saturday, September 3, 2016

பெரிய புராணம் - மனம் மலரும் கலை

பெரிய புராணம் - மனம் மலரும் கலை


பெரிய புராணத்தை படிக்க படிக்க , இப்படி ஒரு நூலா என்ற வியப்புதான் மேலிடுகிறது. அது  மட்டும் அல்ல, இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தமும் கூடவே வருகிறது.

கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன், எல்லோருக்கும் தோன்றும் கவலை என்ன ?

இந்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதுதான் ?

 நிறைய வட்டியும் வர வேண்டும், முதலுக்கும் மோசம் வரக் கூடாது, வேண்டிய போது எடுக்கும் படியும் இருக்க வேண்டும்...அப்படிப்பட்ட ஒரு முதலீடு எது என்று ஒரே யோசனையாக இருக்கும்.

இது ஒரு பிரச்னை.

இன்னொரு பிரச்னை என்னவென்றால், பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு, பிள்ளைகளை என்ன படிப்பு படிக்க வைப்பது/படிப்பது  என்பதுதான்.

பிள்ளைகளுக்கு ஒன்றில் விருப்பம் இருக்கும். ஆனால், அதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலை இருக்கும். சரி, அது வேண்டாம் என்றால் , பிடிக்காத ஒன்றை படிக்க வைக்க முடியுமா ? அதுவும் முடியாது. பின் எதைத்தான் படிப்பது ?

அது ஒரு பக்கம் இருக்க, பள்ளி கல்லூரிகளை விடுத்து , பொதுவாக எதைப் படிப்பது ? நாவல், சிறுகதை, தொடர் கதை, கவிதை, கட்டுரை என்று எதைப்  படிப்பது  என்ற இன்னொரு சந்தேகம்.

கண்டதையும் படித்தால் மனம் திரிந்து போகும்.

இப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சேக்கிழார் பெருமான்  விடை தருகிறார்.

திருநாவுக்கரசு நாயனாருக்கு படிப்பு ஆரம்பிக்க வேண்டும்.

அதை சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

முதலில் அவருக்கு மொட்டை அடித்து, குழப்பம் இல்லாத தெளிந்த மதி உடைய பெரியவர்கள் எல்லாம் மகிழும்படி ஒரு விழா எடுத்து, ஆற்று வெள்ளம் போல செல்வத்தை அள்ளிக் கொடுத்து, புலன்கள் பற்றி, மனம் மலரும், மனச் சுருக்கத்தை நீக்கும் கலைகளை பயிலத் தொடங்குவித்தார்.

பாடல்

மருணீக்கி யார்சென்னி
   மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
   மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


பொருள்

மருணீக்கி யார் = மருள் நீக்கியார் (திருநாவுக்கரசரின் இயற் பெயர்)

சென்னி = தலை

மயிர்நீக்கும் = முடிகளை களைந்து

மணவினையுந் = சிறந்த வைபவத்தையும்

தெருணீர்ப்பன் = தெருள் நீங்கிய

மாந்தரெலாம் = சுற்றம் மற்றும் நண்பர்கள் எல்லாம்

மகிழ்சிறப்பச் = மகிழ்ந்து சிறப்பாக

செய்ததற்பின் = செய்த பின்

பொருணீத்தங் கொள = பொரு நீத்தம் என்றால் வெள்ளம்.

வீசிப் = அள்ளிக் கொடுத்து

புலன்கொளுவ = கொளுவுதல் என்றால் சிக்கிக் கொள்ளுதல், மாட்டிக் கொள்ளுதல் என்று அர்த்தம். புலன் கொளுவ என்றால் புலன்கள் சேர்ந்து கொள்ளுதல்.

மனமுகிழ்த்த = மனம் மொட்டு மலர்வது போல மலர்ந்து

சுருணீக்கி = சுருள் நீக்கி

மலர்விக்குங் = மலர வைக்கும்

கலைபயிலத் = கலைகளை கற்றுக்கொள்ள

தொடங்குவித்தார் = ஆரம்பித்து வைத்தார்

மேலோட்டமாகப் பார்த்தால், பாடல் என்னவோ இவ்வளவுதான்.

சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

முதலில் , எதற்கு மொட்டை அடிக்க வேண்டும் ? படிப்புக்கும் மொட்டைக்கும் என்ன சம்பந்தம்.

இளம் வயதில், உடல் அழகில் மனம் செல்லச் தொடங்கினால், மனம் புலன்கள் பின்னேயே போய் விடும்.  முதலில் முடி வளர்க்கச் சொல்லும், பின் அதை அழகாக வெட்டி, அதற்கு எண்ணெய் போட்டு அழகு செய்யச் சொல்லும். பின் அவன் முடி அழகா, என் முடி அழகா என்று  ஒப்பிடச் சொல்லும்.

கவனம் சிதறும்.

முடி வெட்டுவது என்பது ஒரு அடையாளம். பொதுவாக படிக்கும் காலத்தில் புலன் இன்பங்களை நுகர விடக் கூடாது. புலன் இன்பங்களின் சுகம் தெரிந்து விட்டால், புலன்கள் அதையே மேலும் மேலும்  வேண்டும் என்று கேட்கும்.  டிவி, பகட்டான உடை, பலவிதமான  சுவை உள்ள சாப்பாடு என்று குழந்தைகளுக்கு ருசியை காட்டி  விட்டால், பின் கவனம் எல்லாம் அதிலேயே போகும்.

எந்த சினிமாவுக்குப் போகலாம், எந்த ஓட்டலில் போய் என்ன சாப்பிடலாம், என்றே மனம் செல்லும்.

அது மட்டும் அல்ல, கிடைக்காததற்கு மனம் ஏங்கும் , வாங்கித் தராத  பெற்றோர் மேல் கோபம் வரும். வீட்டுகுத் தெரியாமல் பணம் எடுத்துப் போய் வங்கச் சொல்லும், உண்ணச் சொல்லும்.

இதை தவிர்க்க வேண்டும் என்றால், முதலில் ஆடம்பரங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது.

தசரதன் , தன் பிள்ளைகளான இராம இலக்குவனர்களை வசிட்டரின் ஆசிரமத்துக்கு அனுப்பித்து படிப்பு சொல்லித் தரச் செய்தான்.

சக்கரவர்த்தி அவன். நினைத்து இருந்தால், வசிட்டருக்கு ஒரு அரண்மனை  ஒதுக்கி அங்கேயே பாடம் சொல்லித் தந்து இருக்கலாம். செய்ய வில்லை. ஏன் , அரச போகங்களை அனுபவிக்க  ஆரம்பித்து விட்டால், படிப்பு மண்டையில் ஏறாது.

இது முதல் பாடம்.

இரண்டாவது, முடியை எடுப்பது என்பது அடையாளத்தை மாற்றுவது. இறைவனுக்கு ஏன் முடி காணிக்கை கொடுக்கிறோம் ? முடி ஒரு  அடையாளம். மொட்டை அடித்து விட்டால் அழகு போகும். அடையாளம் போகும்.  அழகு போனால் ஆணவம் போகும். அடையாளம் போனால்  நான் என்பது இந்த முடியிலா இருக்கிறது என்ற எண்ணம் வரும். நான் என்ற அடையாளம் போய் இறைவன் முன்  நான் பணக்காரன், படித்தவன், என்ற அடையாளங்கள் எதுவும் இல்லாமல்  எளிமையாக இருக்க முடியும்.

அதே போல, படிக்கும் முன், முடி களைவது , நான்  புதிய அவதாரம் எடுக்கிறேன். மாணவன் என்ற அவதாரம். இன்னாரின் பிள்ளை என்ற  அடையாளம் போய் , இன்னாரின் மாணவன் என்ற புது பிறவி  எடுக்கிறேன்.

இது இரண்டாவது பாடம்.

நம்மிடம் பணம் இருந்தால், வீடு வாங்குவோமா, கார் வாங்குவோமா, பங்குகள் வாங்குவோமா, நகை நட்டுகள் வாங்குவோமா என்று  நினைப்போம். யாராவது, நம்மிடம் இருக்கும்  இந்த பணத்தை கொண்டு நம்  பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியை வாங்குவோமா  என்று யோசித்தது உண்டா? அப்படியே யோசித்தாலும்,  எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரம்பு கட்டுவோம் .

திருநாவுக்கரசரின் தமக்கையார்,  பணத்தை தண்ணியாக செலவழித்தாராம். பெருகி வரும் வெள்ளம் போல பணத்தை செலவழித்து  தம்பியை படிக்க வைத்தாராம்.

பணத்தை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தாராளாமாக செலவு செய்யுங்கள்.

இது  மூணாவது பாடம்.

பிள்ளைகளை tuition  அனுப்ப வேண்டும் என்றால் எவ்வளவு ஆகும் என்று  கனக்குப் போடுவோம். மிக மிக சிறந்த ஆசிரையைக் கொண்டு  படிப்பித்தால் செலவு அதிகமாகும். இவ்வளவு செலவழிக்க  வேண்டுமா என்று யோசிப்போம்.

யோசிக்காதீர்கள், என்று சேக்கிழார் பாடம் நடத்துகிறார்.

Tuition , விலை அதிகம் உள்ள புத்தகங்கள்,  CD , போன்றவற்றை வாங்கித் தாருங்கள்.

தெருணீர்ப்பன் மாந்தரெலாம்...தெருள் என்றால் தெளிவு. தெளிவான சுற்றமும் நட்பும் இருந்தது. இருக்க வேண்டும்.

அது என்ன தெருள் ?

மனிதனுக்கு அறிவு நான்கு படிகளில் இருக்கிறது.

இருள், மருள், தெருள் மற்றும் அருள்.

இருள் என்பது ஒன்றும் தெரியாமல்  இருப்பது. தெரியாது என்பது கூட தெரியாமல்  இருப்பது.   படிப்பறிவும்,அனுபவ அறிவும்  இல்லாமல் இருப்பது.

அடுத்த படி, மருள். அறியாமை புலப்படும்.  அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆவல்  இருக்கும். எதைப் படிப்பது,  எது  சரி,எது
தவறு என்று தெரியாமல்  தடுமாறுவது.

அடுத்த படி, தெருள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்று இருப்பது.

அதற்கும் அடுத்த படி அருள்.

அறிவின் கடைசிப் படி அருள்.

உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

அது அருளின் உச்சம்.


   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


புலன்கள் சென்று பற்றிக் கொள்ள. அறிவு நமக்கு புலன்கள் மூலமாகத்தான் வரவேண்டும். வாசித்து , கேட்டு, தொட்டு அறிந்து, நாம் அறிவைப் பெறுகிறோம். ஐந்து புலன்கள் + மனம் என்ற ஆறாவது கருவியும் சேர்த்து நமக்கு ஆறறிவு. 

அறிவு சேர சேர மனம் மலர வேண்டும். மொட்டு போல கூம்பி இருக்கும் மனம் மலரும். 

மலரும் என்றால், மணம் வீசும், தேனை அள்ளித் தரும். அழகாக இருக்கும். 

அறிவு ஒரு அழகு.

மனம் விரியாத கலை ஒரு கலை இல்லை. 

படிக்க படிக்க உற்சாகம் பீறிட்டு எழ வேண்டும். மனம் ஒரு மலரைப் போல மென்மையாக வேண்டும். வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காமல் எல்லோர்க்கும் மணம் தர வேண்டும். 

அப்படி படிக்க வேண்டும். 

இது ஒரு பாடல்.

எனக்குத் தெரிந்தது  இவ்வளவுதான்.

இப்படி எத்தனை பாடல்கள். எவ்வளவு கருத்துச் செறிவு. 

நாம் தான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_3.html

Thursday, August 25, 2016

பெரிய புராணம் - காலையின் ஒலி

பெரிய புராணம் - காலையின் ஒலி 


அந்தக் காலத்தில் , கல்லூரியில் படிக்கும் போது அதி காலை எழும் வழக்கம் இருந்தது.

ஒரு 4:30 அல்லது 5:00 இருக்கும் , வழக்கமாக எழும் நேரம்.

அதி காலையில் வெளிச்சம் முழுவதுமாக இருக்காது. லேசாக வெளிச்சம் படரும் நேரம்.

சில வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தம், வாசலை பெருக்கும் சத்தம் கேட்கும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதி வண்டியில் செல்வோர் அடிக்கும் bell  ஒலி கேட்கும்.

தினசரி நாள் இதழ் போடும் சத்தம் கேட்கும். கோவிலில் பாட்டு போடுவார்கள் அந்த சத்தம் கேட்கும்.

கொஞ்ச நேரம் ஆன பின் சில வீடுகளில் வானொலி பெட்டி ஒலிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே  போகும். கல்யாணக் காலம் என்றால் , பல கல்யாண மண்டபங்களில் பாட்டு போடுவார்கள்.

இதையே இன்னும் சில நூறு ஆண்டுகள் முன்னோக்கி எடுத்துச் சென்றால் எப்படி இருக்கும் ?

அன்றுள்ள மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் ? என்ன மாதிரி ஒலி எல்லாம் கேட்டிருக்கும் அந்தக் காலத்தில் ?

சேக்கிழார் படம் பிடிக்கிறார்.

அது ஒரு கடலோர கிராமம்.

அதி காலையில், தூரத்தில் கடலின் அலைகள் எழுப்பும் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது.

பொழுது விடிகிறது.

எங்கோ சில வீடுகளில் பாட்டு, நடனம், வேதம் போன்ற கலைகள் நடக்கும். அந்த சப்தம் ஒரு புறம் வருகிறது.

கொஞ்சம் தள்ளி, யானை குட்டிகளை பழக்கப் படுத்துவோர்   எழுப்பும் ஒலி கேட்கிறது.

இன்னொரு பக்கம், சோலையில் வண்டுகள் ரீங்காரமிடும் சப்தம்.

மற்றொரு புறம், குதிரையை பழக்குவோர் எழுப்பும் ஒலி .

சில வீடுகளில் யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைக்கும் ஒலி .

இன்னும் சில இடங்களில் ஆடல் பாடல் இவற்றிற்காக இசைக்கும் வாத்திய ஒலி .

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் கூடி, கடலின் அலை சப்தத்தை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

பாடல்

காலை எழும்பல் கலையின்ஒலி
     களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை எழும்மென் சுரும்பின்ஒலி
     துரகச் செருக்கால் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
     பாடல் ஆடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கிஎழ 
     விளங்கி ஓங்கும் வியப்பினதால்.

பொருள்


காலை = காலையில்

எழும்பல் = எழும் போது

கலையின்ஒலி = ஆடல், பாடல், போன்ற கலைகளின் ஒலி

களிற்றுக் கன்று = யானைக் குட்டியை

வடிக்கும்ஒலி = பழக்கும் ஒலி

சோலை எழும்மென் = பூங்காவில் தோன்றும்

சுரும்பின்ஒலி = வண்டுகளின் ஒலி

துரகச் செருக்கால் சுலவும்ஒலி = பெருமிதம் கொண்ட குதிரைகளை பழக்கும் ஒலி 

பாலை விபஞ்சி பயிலும்ஒலி = பாலை போன்ற யாழ்களை மீட்டும் ஒலி

பாடல் ஆடல் முழவின்ஒலி = ஆடலுக்கும், பாடலுக்கும் வாசிக்கும் மிருதங்கம், மத்தளம் போன்றவற்றின் ஒலி

வேலை ஒலியை விழுங்கிஎழ = கடலின் ஒலியை மிஞ்சி எழ

விளங்கி ஓங்கும் வியப்பினதால்.= ஓங்கி வியக்கும் படி ஒலித்தன

அந்தக் கால கிராமம் கண் முன்னால் படமாக விரிக்கிறதா ?

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ். 

பெரிய புராணத்தைப் படித்துப் பாருங்கள். அத்தனையும் தேன் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_35.html



Tuesday, November 24, 2015

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்


திருநீல கண்டர் , இளமையின் வேகத்தால், காம வயபட்டு , மனைவி அல்லாத இன்னொரு பெண்ணிடம் உறவு கொண்டார். அது கண்டு பொறுக்க மாட்டாத அவரின் மனைவி "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது " என்று கூறினார்.

மனைவியின் வாக்கை ஏற்று, மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் நினையாமல் வாழ்ந்து வந்தார்.

சரி, ஏதோ கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வந்து விட்டது. மனைவியும் ஏதோ சொல்லி விட்டாள் என்று இல்லாமல் அவள் சொன்னதை வேத வாக்காக கொண்டு அவர் வாழத் தொடங்கினார்.

மனைவியோ, கணவனிடம் சண்டை போட்டாள் , எம்மை தொடாதே என்று ஆணையிட்டாளே தவிர வேறு ஒன்றிலும் குறை வைக்கவில்லை.

அவரைத் தொட்டு செய்யும் பணிவிடை தவிர்த்து மீதி அத்தனை காரியங்களையும் செய்து வந்தார்.

அது மட்டும் அல்ல, அவர்களுக்குள் நடந்த இந்த சண்டை, ஊடல், இந்த சங்கல்பம் அக்கம் பக்கம் யாரும் அறியாமல் மறைத்து வைத்தார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். வரும்.

எக்காரணம் கொண்டும், அது வெளியில் தெரியக் கூடாது. அது அவர்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தின் மானத்தை, ஒரு குயவாணர் குலத்தில் பிறந்த ஒரு பெண் எப்படி கட்டிக் காக்கிறாள் என்று காட்டுகிறார் சேக்கிழார்.

ஒரு குடும்பத்தின் மானம், கௌரவம் அந்த வீட்டின் பெண்ணின் கையில் இருக்கிறது.

அவள் , தவறிப் போய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் அந்த குடுமத்தின் மானம் பறி போய் விடும்.

பாடல்

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்

பொருள்

கற்புறு மனைவியாரும் = கற்பு அமைந்த அந்த மனைவியும்

கணவனார்க்கு = கணவருக்கு

ஆன எல்லாம் = தேவையான எல்லாம்

பொற்புற = பொறுப்புடன்

மெய் உறாமல் = உடல் மட்டும் தொட்டுக் கொள்ளாமல்

பொருந்துவ = தேவையானவற்றை

போற்றிச் செய்ய = விரும்பிச் செய்தார். ஏதோ கடனுக்கு என்று செய்யவில்லை.

இல் புறம்பு ஒழியாது = வீட்டு விஷயம் வெளியில் தெரியாமல்

அங் கண் இருவரும் = அவர்கள் இருவரும்

வேறு வைகி = வேறு வீரு ஆளாக நாட்களை கடத்தி வந்தனர்

அன்புறு = அன்புடன் ஏற்படும்

புணர்ச்சி இன்மை = உடல் உறவு இல்லாமையை

அயலறியாமை வாழ்ந்தார் = வெளியில் உள்ளவர்க்கள் அறியாமல் வாழ்ந்து வந்தனர்.


கணவன் மனைவிக்கு இடையில் சண்டை தான். ஊடல் தான். ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வது  கூட கிடையாதுதான். இருந்தாலும், அது வெளியில் யாருக்கும்  தெரியாமல் எப்போதும் போல சிரித்து பேசி வாழ்கிறார்கள்.

கணவனுக்கு வேண்டியது எல்லாம் அன்போடு, விருப்போடு சிறப்பாகச் செய்து தருகிரார் அந்தப் பெண். முகம் சுழிப்பது இல்லை. முகத்தை கடு கடு என்று வைத்துக் கொள்வது இல்லை.

ஒரு புடவை  எடுத்துத் தர வில்லை என்றால், ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போகவில்லை என்றால்  சில வீடுகளில் பெண்மணிகளின் முகம் போகும் போக்கே தனிதான்.

தண்ணீர் செம்பும், கதவும் கிடந்து இடிபடும்.

ஆனால், இந்தப் பெண்ணோ, அன்புடன் சிரித்த முகத்துடன் அனைத்தும் செய்தார்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு விலைமகளின் வீட்டுக்குப் போய் வந்தவனை அடியார்களில் ஒருவனாக  ஏற்றுக் கொள்ளும்  பக்குவமும் துணிவும் வேறு எந்த மதத்துகாவது இருக்குமா ?

மனிதர்கள் பலவீனமானவர்கள்.

தவறு செய்யும் இயல்பு உடையவர்கள்.

அந்த பலவீனங்களை ஏற்றுக் கொண்டது இந்து மதம்.

படிப்பு அறிவு இல்லாதவனுக்கும், பண வசதி இல்லாதவனுக்கும்,  தவறு செய்பவனுக்கும்  நல்ல கதி கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையை தந்தது இந்த மதம்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, வா என்று அன்போடு அழைத்துக் கொண்டது இந்த மதம்.

மதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ,  இப்படி பட்ட தனி மனித  வாழ்க்கையை உயர்த்திப் பிடித்த பெரிய புராணத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?

நம் பெருமை நமக்குத் தெரியவில்லை.



Monday, November 23, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?

பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....

===================== பாகம் 2 ===========================================

மனித மனம் எப்போதும் எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே இருக்கும். எதையும் பற்றாமல் அதனால் இருக்க முடியாது. 

அதிலும், தீய குணங்களை எளிதில் பற்றிக் கொள்ளும். நல்ல குணங்களைப் பற்ற நாள் ஆகும். 

எனவே தான் பதியும், பாசமும் இருக்க, பசு எப்போதும் பாசத்தையே பற்றும், பதியை விட்டு விட்டு. 

பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னும் என்று சொல்ல்வார்கள். ஏன் மாத்திச் சொல்ல முடியவில்லை ? 

கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னும் என்று சொல்ல முடியாது. 

ஏன் ?

தீய பழக்கங்கள் எளிதில் வந்து விடும்.

அதனால் தான் அவ்வையார், 

தீயாரை காண்பதுவும் தீது என்றாள் 


தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயவர்களைக் பார்க்கக் கூட கூடாது என்கிறாள். பார்த்தால், கிட்ட வா என்பான். வந்தால் , "வா அப்படியே ஒரு டீ சாப்டுகிட்டே பேசலாம்" என்பான் . ஒன்றிலிருந்து ஒன்றாக பல தீய பழக்கங்கள் வந்து சேரும்.

தீயவன் , தீயவற்றில் காட்டும் ருசி ஒரு புறம். நம் மனம் தீயவற்றை எளிதாகப் பற்றி கொள்ளும் குணம் மறு புறம். 

மனம் எதயாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் இருக்கும்.

எனவே தான், பற்றை விடச் சொன்ன வள்ளுவர் கூட

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

திருநீலகண்டர் இறைவனைப் பற்றிக் கொண்டார்.  இறைவன் மேல் ஆணை என்று சொன்னவுடன், அவரால் காமத்தை விட முடிந்தது. 

அது மட்டும் அல்ல, மனைவியின் சொல்லை அவர் மதித்தார். "நீ யார் என்னை தடுப்பதற்கு ...நான் ஆம்பிளை எங்க வேண்டுமானாலும் போவேன் வருவேன் " என்று வீரம் பேசவில்லை. 

மனைவியின் சொல்லுக்கு மதிப்பு தரும் அந்த பண்பு எங்கிருந்து வந்தது. 

படித்து வரவில்லை. 

பக்தியினால் கூட வந்திருக்காது. பக்தி , மனைவி பேச்சை கேள் என்று சொல்லித் தருவது இல்லை. 

இறைவன் மேல் பக்தி வரும் போது , அப்படி பக்தி கொண்ட மற்ற நல்லவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு அவரை பண் படுத்தியது என்றுதான் கொள்ள வேண்டும். 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று


அப்படி இருந்தால் , ஏன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குப் போனார் என்ற கேள்வி வருகிறது அல்லவா ?  

சேக்கிழார் சொல்கிறார் "இளமை மீதுற...எளியர் ஆனார் " என்கிறார். உணர்ச்சி வசப்பட்டு, தன் வசம் இழந்து தவறு செய்தார் என்று ஒப்புக் கொள்கிறார் செய்கிறார். 

அதை பூசி மெழுகவில்லை. அந்த தவறான செயலுக்கு ஞாயம்  தேடவில்லை. 

தவறு செய்து விட்டார். அதை மனைவி கண்டித்தவுடன், உணர்ந்து மனைவியின் பேச்சைக் கேட்டு, அப்படியே நடந்தார்.

பக்தியின் உச்சம் தொட்டு காட்டுகிறார் சேக்கிழார்.

பக்தி, ஒரு படிக்காத பாமரனை, இந்த அளவுக்கு பக்குவப் படுத்தும் என்றால், மற்றவர்களை அது எந்த அளவுக்கு பண்படுத்தும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். 

இவர் அப்படி என்றால், அவரின் மனைவி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சேக்கிழார் அடுத்த பாடல் காட்டுகிறார். 













Friday, November 20, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 5

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 5


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?


பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....



Sunday, November 15, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - எம்மை தீண்டாதீர் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 4

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - எம்மை தீண்டாதீர்  - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 4



திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.      

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....

====================== பாகம் 3 ==========================================

காமம், யாரை விட்டு வைத்தது ?

எல்லாம் படித்த பராச முனிவர் மச்சகந்தியிடம் மயங்கினார்

ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் அகலிகையிடம் மயங்கினான்

நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நா கொண்ட இராவணன் சீதையிடம் மயங்கினான்.

திருநீலகண்டர், படிப்பு அறிவு இல்லாதவர். ஏழை குடும்பத்தில் வந்தவர். இலட்சுமி போன்ற அழகான மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதானால், அவருடைய மனைவி அவர் மேல் கோபம் கொண்டார்.

வீட்டில் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தார்கள். அவருக்கு வேண்டிய எல்லாம்  அவருடைய மனைவி செய்வார். ஆனால், அவரை தொட விட மாட்டார். தனிப் படுக்கைதான்.

பாடல்

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.



பொருள்

ஆன தம்  = தனக்கு என்று ஆன

கேள்வர் = துணைவர்.  சேக்கிழார் தேர்ந்து எடுத்து சொற்களைப் போடுகிறார். கேள்வன் என்று இருந்திருக்க வேண்டும்.  கேள்வர் என்று பன்மையில் வருகிறது. மரியாதை நிமித்தம் என்றும் கொள்ளலாம். தன்னைத் தவிர மற்ற பெண்களுக்கும் உறவாக இருந்ததால் கேள்வர் என்று பன்மையில் கூறினார் என்றும் கொள்ளலாம்.


அங்கு = அந்த இடத்தில்

ஓர் பரத்தை பால் = ஒரு விலை மகளிடம்

அணைந்து = உடன் இருந்து

நண்ண = மீண்டும் மனை வர

மானமும் பொறாது = அவமானம் அடைந்து

வந்த ஊடலால் = அதில் வந்த ஊடலால்

மனையின் வாழ்க்கை = வீட்டு வாழ்க்கையில்

ஏனைய எல்லாம் செய்தே = மற்றது எல்லாம் செய்து. உணவு சமைத்துத் தருவார், ஆடைகள் எடுத்துத் தருவார்...

உடன் உறைவு இசையார் ஆனார் = கூடி இருப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

தேன் அலர் = தேன் சிந்தும்

கமலப் = தாமரைப்

போதில் = பூவில்

திருவினும் = திருமகளை விட

உருவம் மிக்கார். = அழகு உடைய அவர்

மனைவி இலட்சுமியை விட அழகானவராக இருந்தாலும்  விலை  மகளிடம்  அவருக்கு நாட்டம்.

காமம் யாரை விட்டது ?

தங்கச் சிலை போன்ற மனைவி அருகில்.

மனைவியை அவர் ஆசையுடன் நெருங்குகிறார். அவளின் ஊடலைத் தீர்த்து, அவளோடு கூட....

அவர் நினைத்தது ஒன்று...நடந்தது வேறு ஒன்று.....

================== பாகம் 4 =============================================

மனைவியின் ஊடலை தீர்க்க எண்ணி , மனைவியை அணைக்க அவள் அருகில்  நெருங்கினார்.

"என்னை ஒண்ணும் தொட வேண்டாம் " என்று சொல்ல நினைத்தார் அவரின் மனைவி.

உடனே அவள் மனதில் ஒரு சிந்தனை ஓடியது.

இவர் ஏற்கனவே பல பெண்களை நாடுபவர். இப்ப நாம வேறு "என்னைத் தொடாதே" என்று சொன்னால், சரிதான் இதுதான் சாக்கு என்று அந்த பெண்களின்  வீடே கதி என்று அங்கேயே போய் விடுவார்.

என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த பெண் ஒன்று சொன்னாள் ...

"என்னை மட்டும் அல்ல, நீர் வேறு எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது " என்று  ஆணையிட்டார்.

பாடல்

மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.

பொருள்

மூண்ட = தோன்றிய. தீ போல் மூண்ட

அப் புலவி = அந்த ஊடல்

தீர்க்க = தீர்க்க வேண்டி

அன்பனார் = திருநீல கண்ட நாயனார்

முன்பு சென்று = மனைவியின் முன் சென்று

பூண் தயங்கு = பூண் போன்ற அணிகலன்கள் அவளின் அழகின் முன் தயங்கி பின்னாலே போக

 இளமென் சாயல் = இளமையான மென்மையான

பொன் = பொன் போன்ற பொலிவுடன் கூடிய

கொடி = கொடி போன்ற

அனையார் தம்மை = அவரின் மனைவியை

வேண்டுவ இரந்து = அவளுக்கு என்ன வேண்டுமோ அவற்றை கேட்டு

கூறி = அதற்கு வேண்டியதை கூறி

மெய் உற அணையும் போதில் = அணைக்கப் போகும் போது

‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். = திருநீலகண்டத்தின் மீது ஆணை எம்மை தீண்டாதீர் என்றார்.


தீண்டுவீர் ஆயின் என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்றார்.

அடுத்து என்ன நடந்தது ?






Thursday, November 12, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - உடன் உறவு இசையார் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 3

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - உடன் உறவு இசையார் - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 3



திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.        

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....

====================== பாகம் 3 ==========================================

காமம், யாரை விட்டு வைத்தது ?

எல்லாம் படித்த பராச முனிவர் மச்சகந்தியிடம் மயங்கினார்

ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் அகலிகையிடம் மயங்கினான்

நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நா கொண்ட இராவணன் சீதையிடம் மயங்கினான்.

திருநீலகண்டர், படிப்பு அறிவு இல்லாதவர். ஏழை குடும்பத்தில் வந்தவர். இலட்சுமி போன்ற அழகான மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதானால், அவருடைய மனைவி அவர் மேல் கோபம் கொண்டார்.

வீட்டில் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தார்கள். அவருக்கு வேண்டிய எல்லாம்  அவருடைய மனைவி செய்வார். ஆனால், அவரை தொட விட மாட்டார். தனிப் படுக்கைதான்.

பாடல்

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.



பொருள்

ஆன தம்  = தனக்கு என்று ஆன

கேள்வர் = துணைவர்.  சேக்கிழார் தேர்ந்து எடுத்து சொற்களைப் போடுகிறார். கேள்வன் என்று இருந்திருக்க வேண்டும்.  கேள்வர் என்று பன்மையில் வருகிறது. மரியாதை நிமித்தம் என்றும் கொள்ளலாம். தன்னைத் தவிர மற்ற பெண்களுக்கும் உறவாக இருந்ததால் கேள்வர் என்று பன்மையில் கூறினார் என்றும் கொள்ளலாம்.


அங்கு = அந்த இடத்தில்

ஓர் பரத்தை பால் = ஒரு விலை மகளிடம்

அணைந்து = உடன் இருந்து

நண்ண = மீண்டும் மனை வர

மானமும் பொறாது = அவமானம் அடைந்து

வந்த ஊடலால் = அதில் வந்த ஊடலால்

மனையின் வாழ்க்கை = வீட்டு வாழ்க்கையில்

ஏனைய எல்லாம் செய்தே = மற்றது எல்லாம் செய்து. உணவு சமைத்துத் தருவார், ஆடைகள் எடுத்துத் தருவார்...

உடன் உறைவு இசையார் ஆனார் = கூடி இருப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

தேன் அலர் = தேன் சிந்தும்

கமலப் = தாமரைப்

போதில் = பூவில்

திருவினும் = திருமகளை விட

உருவம் மிக்கார். = அழகு உடைய அவர்

மனைவி இலட்சுமியை விட அழகானவராக இருந்தாலும்  விலை  மகளிடம்  அவருக்கு நாட்டம்.

காமம் யாரை விட்டது ?

தங்கச் சிலை போன்ற மனைவி அருகில்.

மனைவியை அவர் ஆசையுடன் நெருங்குகிறார். அவளின் ஊடலைத் தீர்த்து, அவளோடு கூட....

அவர் நினைத்தது ஒன்று...நடந்தது வேறு ஒன்று.....