Wednesday, November 13, 2013

இராமாயணம் - எது வரை விளக்கு எரியும் ?

இராமாயணம் -  எது வரை விளக்கு எரியும் ?




புண்ணிய நறு நெயில்,
    பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில்,
    விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை
    இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு
    ஐயம் யாவதோ? ‘‘

விளக்கு எதுவரை எரியும் ? திரியும் எண்ணையும் உள்ள வரை எரியும்...அதற்குப் பின் அணைந்து போகும். இதில் என்ன சந்தேகம் ?

நம் வாழ்க்கை என்று தீபம் நாம் செய்த புண்ணியம் என்ற எண்ணெய் , காலம் என்ற திரி இருக்கும் வரை ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

செய்த புண்ணியம் எல்லாம் நாம் அனுபவிக்க உதவுவது காலம் என்ற திரி.

புண்ணியத்தின் பலன் முடியும் போது வாழ்கை முடிந்து போகும்.

எண்ணையும், திரியும் தீர்ந்த விளக்கின் தீபம் போல....

பொருள்


புண்ணிய நறு நெயில் = புண்ணியம் என்ற நல்ல நெய்யும்

பொரு இல் = ஒப்பற்ற

காலம் ஆம் = காலம் என்ற

திண்ணிய திரியினில் = திடமான திரியில்

விதி என் தீயினில் = விதி என்ற தீயில் , தீபம்

எண்ணிய விளக்கு = உண்டான விளக்கு

அவை  இரண்டும் எஞ்சினால் = அவை இரண்டும் தீர்ந்து போனால்

அண்ணலே! = அண்ணலே 

அவிவதற்கு = அணைந்து போவதற்கு

ஐயம் யாவதோ? = சந்தேகம் ஏதும் உண்டோ ? (கிடையாது)

பாவம் செய்தால் அதை அனுபவிக்க வாழ்கை கிடையாதா ?

புண்ணியம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். நீண்ட நாள் வாழ வேண்டும் என்றால்  புண்ணியம் செய்யுங்கள்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு தளர்ந்த இராமனுக்கு ஆறுதலாக வசிட்டன் கூறியது.





2 comments:

  1. அப்படியானால், தசரதன் புண்ணியம் தீர்ந்து விட்டதா?!

    ReplyDelete
  2. இதே போல் அனுமன் ராவணனை முதன் முதலில் பார்க்கும் போது 'நீ செய்த புண்ணியம் எல்லாம் தீர்ந்து விட்டது இனி உன்னை காக்க அந்த பிரம்மனாலும் முடியாது' என்று கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

    ReplyDelete