Friday, September 27, 2013

மூதுரை - பிளவு

மூதுரை - பிளவு 

உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா ? அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா ? வந்த கோபம் இன்னும் இருக்கிறதா ? அப்படி யாராவது இருக்கிறார்களா உங்கள் பட்டியலில் ? உங்களுக்கு முன்பு தீமை செய்தவர்கள், உங்களை ஏமாற்றியவர்கள், என்று யாராவது இருக்கிறார்களா ? யோசித்துப் பாருங்கள்....

அந்த பட்டியல் அப்படி ஒரு புறம் இருக்கட்டும்....

இந்த கல்லு இருக்கிறதே அது ஒரு முறை உடைந்து விட்டால் பின் ஒட்டவே ஒட்டாது. என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும். 

பொன் இருக்கிறதே, அதில் கொஞ்சம் பிளவு வந்து விட்டால் உருக்கி ஒட்ட வைத்து விடலாம். ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிடணும்

இந்த தண்ணீரின் மேல் அம்பை விட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப் பொழுதில் மீண்டும் சேர்ந்து கொள்ளும். அம்பு பட்ட தடம் கூட இருக்காது. 

கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டார்கள். நமக்கு எப்படி மறு தீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள். இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல 

நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால், கொஞ்ச நாள் மனதில் வைத்து இருப்பார்கள்....பின் மறந்து விடுவார்கள் - பொன் மேல் பிளவு போல 

ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாம் ஏதாவது  தீமை செய்து விட்டால் உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள்....நீர் மேல் பிளவு போல 

பாடல் 

கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

பொருள்

கற்பிளவோ ஒப்பர் கயவர் = கல்லில் ஏற்பட்ட பிளவு போல இருப்பர் கயவர்களிடம் வந்த பிளவு 

கடுஞ்சினத்துப பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே = பொண்னின் மேல் ஏற்பட்ட பிளவு போல இருப்பாரும் உண்டு 

- விற்பிடித்து = வில்லை எடுத்து 

நீர்கிழிய = நீர் கிழியும் படி 

எய்த வடுப்போல மாறுமே = அம்பை எய்தால் உண்டாகும் வடு எப்படி சட்டென்று மாறுமோ அப்படி மாறும் 

சீர்ஒழுகு சான்றோர் சினம் = சிறப்பான சான்றோர் கொண்ட சினம் 

சரி , அந்த பட்டியலை எடுத்துப் பாருங்கள். பெரிய பட்டியலோ ? ரொம்ப நாள் இருக்கிறதோ ?

1 comment:

  1. நாம் சான்றோராக இருந்தால், எல்லோரையும் மன்னிக்கலாம்! சரியான டிரிக் ஆனா பாடல்!

    ReplyDelete