Sunday, April 24, 2022

சிவ ஞான போதம் - மாயை

 சிவ ஞான போதம் - மாயை 


சைவ சித்தாந்ததின் அடிப்படை தத்துவம் என்பது பதி, பசு, பாசம் என்ற மூன்றில் தொடங்குகிறது என்று சிந்தித்தோம். 


இந்த மூன்றும் என்றும் உள்ளது. 


இதில் பசு என்ற உயிர், தோன்றும் பொழுதே ஆணவம் என்ற மலத்தில் சிக்கி இருக்கும் (தாயின் வயிற்றில் கருவைப் போல). ஆணவ மலத்தில் கட்டுண்டு செய்வது அறியாமல் திகைக்கும் உயிர்கள் அந்த இருளில் இருந்து வெளிப்பட நினைக்கும். குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வர நினைப்பது இல்ல. 


அந்த ஆசை தான் மூல கன்மம் என்று சொல்லப் படுகிறது. அனைத்து கர்மங்களுக்கும், வினைகளுக்கும் ஆதி காரணம் அந்த மூல கன்மம் (கர்மம் அல்லது வினை). 


அப்படி வெளிப்படத் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இறைவன் கன்மம், மாயை என்ற இரண்டை தோற்றுவிக்கிறான். 


இந்த மூன்றும் சேர்ந்து மும்மலம் என்று அறியப் படுகிறது. 


வினை செய்ய உடல் வேண்டும், உடலில் உறுப்புகள் வேண்டும்,  இருந்து செய்ய இடம் வேண்டும், செய்கின்ற அனுபவம் வேண்டும். இவற்றை தனு, கரண, புவன, போகம் என்று கூறுவார்கள் 


இவற்றையெல்லாம் இறைவன் மாயையில் இருந்து தோற்றுவிக்கிறான். 


என்ன இது மாயை, மாயை என்று எதற்கெடுத்தாலும் மாயை என்று சொன்னால் என்ன அர்த்தம். மாயை என்றால் என்ன? 


ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறோம். பார்க்க அழகாக இருக்கிறது. பிரமாண்டமாக இருக்கிறது. 


அந்தக் கட்டிடம் செங்கல், சிமெண்ட், கம்பி, மரம்,கண்ணாடி, போன்ற  வற்றால் செய்யப்பட்டது என்று தெரியும். 


ஒரு காரைப் பார்க்கிறோம். அது டையர், streering, பிரேக், என்ஜின், பெட்ரோல் tank, என்ற பல உதிரிப் பாங்களை சேர்த்து செய்யப்பட்டது என்று தெரியும் நமக்கு.


நம் உடம்பு கூட கை, கால், கண், என்ற உறுப்புகளின் தொகுதிதானே. 


உடம்பு ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். அது ஒரு வசதி. அவ்வளவுதான். உடம்பு என்று ஒன்று கிடையாது. உறுப்புகள் என்றுதான் இருக்கிறது. "உடம்பில்" எதை தொட்டுக் காட்டினாலும், அந்தப் பகுதிக்கு பேர் இருக்கும் - நகம், முடி, தோல், விரல் என்று. உடம்பு என்று தனியே கிடையாது. 


சரி, இந்த உறுப்புகள் என்று தனியே இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு உறுப்பும் திசுக்களின் தொகுதி. 


திசுக்குள் தனியாக இருர்க்கிறதா என்றால் இல்லை, அவை செல்களின் தொகுதி. 


சரி செல்களாவது தனியாக இருக்கிறதா என்றால் அது ஜீன், dna (மரபணு), சைட்டோ பிளாசம், செல் membrane என்ற தொகுதிகளால் ஆனது. 


இன்னும் உள்ளே போகலாம். 


என்ன புரிகிறது?


எந்த பெரிய உருவமும் பல சிறிய பாகங்களை உடையது.


எந்த சிறிய பாகமும் அதனினும் சிறிய கூறுகளை உடையது. 


இப்படியே சொல்லிக் கொண்டே போனால், மிக அடிப்படையானது என்பது மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது அல்லவா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_24.html


(click the above link to continue reading)



இன்று நமக்கு இருக்கும் அறிவியல் உபகரணங்கள் கொண்டு நாம் ஒரு நிலையை அடைந்து இருக்கிறோம். உபகரணங்கள் மேலும் சக்தி பெறும் போது இன்னும் உள்ளே போக முடியும். 


எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான ஒன்று மிக மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று தெரிகிறது அல்லவா?


இந்த உலகம், பிரபஞ்சம், என்பதை இறைவன் மாயையில் இருந்து உருவாக்கினான் என்று பார்த்தோம். 


அப்படி என்றால் மாயை என்பது மிக மிக மிக நுண்ணிய என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? 


மாயைகாட்டு, அது எப்படி இருக்கும் என்று கேட்டால் அணுவுக்குள் இருக்கும் துகளை காட்டுவது மாதிரித்தான். காட்ட முடியாது. பார்க்க முடியாது. முழுவதுமாக உணரக் கூட முடியாது.


உள்ளே போகப் போக  அது போய்க் கொண்டே இருக்கும். 


அறிவுக்குள் அகப்படாத ஒன்று. 


இது ஒரு பக்கம். 


இதன் இன்னொரு பக்கம் என்ன என்றால்.....





No comments:

Post a Comment