Tuesday, May 7, 2013

திருக்குறள் - உலக இயற்கை


திருக்குறள் - உலக இயற்கை



பணம் சம்பாதிக்க அறிவு வேண்டுமா ?

இந்த உலகத்தில் படிக்காதவன் பெரிய பணக்காரனாக இருக்கிறான். படித்தவன் வறுமையில் வாடுகிறான். இது ஏன் இப்படி நிகழ்கிறது ?

பணம் சம்பாதிப்பதும், சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பதும், அதை சரியான வழியில் முதலீடு செய்வதும் அறிவினாலன்றி செய்ய முடியாத காரியம். அப்படி இருக்க, எப்படி படிப்பு அறிவு இல்லாதவர்கள் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் ? நிறைய படித்தவர்கள் அப்படி ஒன்றும் பணம் சேர்த்து விடுவதில்லை.....

இதற்கு காரணம் ஊழ் வினை என்கிறார் வள்ளுவர்.

பணம் சேர்பதற்கு உண்டான ஊழ், படிப்பதற்கு ஆவதில்லை. அதே போல் படிப்பதற்கு உண்டான ஊழ் பணம் சம்பாதிக்க ஆவதில்லை.

பாடல்


இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

பொருள்






இரு வேறுலகத் தியற்கை = உலகத்தில் , இயற்க்கை இரு வேறாக இருக்கிறது

திருவேறு = திரு என்றால்  செல்வம். செல்வம் சம்பாதிப்பது ஒன்று

தெள்ளியர் ஆதலும் வேறு = அறிவில் தெளிவுடையவர்களாக இருப்பது என்பது வேறு




3 comments:

  1. "இயற்கையில் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள், சிலர் அறிவு சம்பாதிக்கிறார்கள்" என்பது, எளிய பொருளாக இருக்கும் போலிருக்கிறதே! இதற்க்கு இடையில் "ஊழ்" என்ற கருத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    அத்தியாயத் தலைப்பு வேண்டுமானால் "ஊழ்" என்று இருந்தாலும், "ஊழ்" என்ற வார்த்தைக்கு வேறு பொருள் இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. அது அல்ல பிரச்சனை. அறிவு சேர்பவர்களும், பொருள் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. ஏன் ?

      வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்கிறதே - ஏன் ?

      முட்டாள்களால் சம்பாதிக்க முடிந்த பணத்தை அறிவாளியால் சம்பாதிக்க முடியவில்லையே - அது ஏன் ?


      Delete
  2. We can not generalise like that. People who are intelligent may not be interested in marketing their talents to make money may be the reason and வறுமையும் புலமையும் சேர்ந்து இருந்தது எல்லாம் அந்த காலம்.

    ReplyDelete