Tuesday, April 3, 2012

திருக்குறள் - சைட் அடிப்பது

ஆம்பிளை பசங்க sight அடிகிறத பத்தி கேள்வி பட்டிருக்கோம் பொம்பள பிள்ளைங்க sight அடிப்பாங்களா?

அதுவும் வள்ளுவர் காலத்தில ? அடிச்சிருக்காங்களே...

நான் சொன்னா நம்ப மாட்டீங்க ...

இந்த குறளை படியுங்க அப்புறம் சொல்லுங்க
---------------------------------------------------------------------------------
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
-----------------------------------------------------------------------------------
கண்களவு கொள்ளும் = கண்ணால் களவு செய்வது. எதை களவு செய்வது ? ஆண்களின் மனதை தான்.

சிறுநோக்கம் = சின்ன பார்வை.

காமத்தில் = காதலில் செம்பாகம் அன்று = செம்மையான பாகம், பெரிய பாகம் அல்ல

பெரிது = அதைவிட பெரியது

எல்லாமே பார்வை தான் அப்படின்னு சொல்லறாரு.

sight அடிகிறதுக்கு ஒரு தமிழ் வார்த்தை வேற தர்றாரு .... "சிறுநோக்கம்"

5 comments:

  1. திருவள்ளுவரின் தாடிக்குப் பின்னாடியும் ஏதாவது ஒரு தலை ராகம் இருந்திருக்குமோ?

    ReplyDelete
  2. Very nice word. "Siru nokkam."

    But don't you think Siru Nokkam can come from the boy to the girl?!?

    ReplyDelete
  3. சின்னப்பார்வை பார்ப்பதால் அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஆண்கள் சிறு பார்வை பார்ப்பதில்லை. (மேலும் பரிமேலழகர் இவள் என்றே கூறுகிறார்)

    ReplyDelete