Sunday, July 7, 2013

ஜடாயு - சபாஷ், சரியான விருந்து

ஜடாயு - சபாஷ், சரியான விருந்து 


இராவணன் அரசனான பிறகு, எமன் அரக்கர்களின் உயிரை எடுப்பதை நிறுத்தி விட்டான். இராவணன் கூற்றையும் ஆடல் கொண்டவன் . ரொம்ப நாளைக்குப் பிறகு, கரன் தூரன் என்ற இரண்டு அரக்கர்களை இராமன் கொன்றான். அப்போதுதான், அரக்கர்களின் உயிர் ருசி எப்படி இருக்கும் என்று எமன் ரொம்ப கழித்து ருசித்தான் ஆஹா, நல்ல விருந்து என்று இரண்டு கையாலும் முகந்து உண்டானே, அது உனக்குத் தெரியாதா என்று இராவணனிடம் ஜடாயு கேட்டான்.

பாடல்

'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை 
        மெய்யாக இராமன் விருந்திடவே, 
கை ஆர முகந்து கொடு, அந்தகனார், 
ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ?


பொருள்





உய்யாமல் மலைந்து = பிழைக்காமல் உயிரை விட்டு

உமர் = உன்னுடையவர்கள்

ஆர் உயிரை = அவர்களின் உயிரை

மெய்யாக இராமன் விருந்திடவே = நிஜாமாகவே இராமன் விருந்து இடவே

கை ஆர முகந்து கொடு = (சந்தோஷத்தில்) கை நிறைய முகந்து கொண்டு

அந்தகனார் = எமன்

ஐயா!  = இராவணனே

புதிது உண்டது அறிந்திலையோ? = புதிதாக உண்டது உண்டது உனக்குத் தெரியாதா ?

No comments:

Post a Comment