Wednesday, July 24, 2013

தேவாரம் - என் கடன் பணிசெய்து கிடப்பதே

தேவாரம் - என் கடன் பணிசெய்து கிடப்பதே 


இறைவனுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அது அடியார்களை தாங்குவது.  தாங்குதல் என்றால் கீழே விழாமல் பிடித்துக் கொள்ளுவது. தவறி விழுந்து விடாமல் தாங்கிப் பிடிப்பது.

இறைவா, உன் கடமை என்னை தாங்கிப் பிடிப்பது என்று . கட்டளையாகச் சொல்கிறார். நான் உன்னை வணங்கி, வேண்டி, பெற்றுக் கொள்ளுவது எல்லாம் தேவை இல்லை. என்னை தாங்க வேண்டியது உன் கடமை. நீ உன் கடமையைச் செய்.

அதையும்  சொல்லுகிறார் என்றார், அந்த முருகனைப் பெற்ற பார்வதியை இடப் பாகமாக கொண்டவனே, என்னை தாங்குவது உன் கடமை.

யாருக்கும், அவர்களின் பிள்ளை பேரை சொன்னால் கொஞ்சம் மனம் கனியும். அதோடு மனைவியின் போரையும் கொஞ்சம் சேர்த்து  கொண்டால் இன்னும் இனிமை சேரும்.

அப்படி இறைவனுக்கு கடமையை சொன்ன நாவுக்கரசர், அடிவர்களுக்கும் ஒரு கடமை உண்டு என்று சொல்கிறார். அது, எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அது அடியவர்களின் வேலை. திருத் தொண்டு புரிவது. 

பாடல்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

சீர் பிரித்த பின்

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே 

பொருள்





நம் கடம்பனை = கடம்பனை என்றால் கடம்ப மாலை அணிந்தவன். முருகன். நம்ம முருகன் என்று சொந்தம்  கொண்டாடுகிறார்.

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின் 
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன் 
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!! 

என்பது அருணகிரிநாதர் வாக்கு



பெற்றவள் = முருகனை பெற்றவள் பார்வதி

 பங்கினன் = அவளின் உடலில் பங்கை கொண்டவன் சிவன்

தென் கடம்பை திருக் கர கோயிலான் = தென் கடம்பை திருகர என்ற கோவிலில் குடி கொண்டவன்


தன் கடன் = அவனுடைய கடன்

அடியேனையும் தாங்குதல் = அடியேனாகிய என்னையும் தாங்குதல்

என் கடன் = என்னுடைய கடமை

பணி செய்து கிடப்பதே = பணி செய்து கிடப்பதே



7 comments:

  1. சுவாரசியமான பாடல்! நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பாடல். நன்றி .

    ReplyDelete
  3. அருமையான விளக்கம். மிக்க நன்றி

    ReplyDelete
  4. சிறப்பு. வணங்குகிறேன்.

    ReplyDelete
  5. அருமை...நன்றி

    ReplyDelete
  6. அருமை...நன்றி

    ReplyDelete